பட்ட பகலில்.. உச்சி வெயிலில்... குடத்தை கையில் எடுத்த கனி..! 

சென்னையில் கடந்த 2 மாதங்களாக, தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. என்ன செய்வது என்றே புரியாமல் மக்கள் பெரும் அவதிபட்டு வருகின்றனர். ஆளும் அரசும் முடிந்த வரை நடவடிக்கை எடுத்து தற்போது நிலையை சமாளித்து வருகிறது. 

இந்த நிலையில், இன்றும் தண்ணீர் பிரச்னை பல ஏரியாக்களில் இருப்பதால்,கடும் குடிநீர் பிரச்சினையை அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை என சென்னை கிழக்கு மாவட்ட திமுக மற்றும் மாவட்ட மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. "கழக அரசே செய்லபடு.. தாகத்திற்கு நீர் கொடு" என்ற வாசகம் அடங்கிய காலி குடங்களை வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

உச்சி வெயிலில் தண்ணீர் பிரச்சனைக்காக கனிமொழி மேற்கொண்ட போராட்டத்தில, வாசகம் அடங்கிய காலி குடத்தினை கையில் வைத்தவாறு முழக்கங்களை எழுப்பினார் கனிமொழி

சென்னை துறைமுகம் பகுதியில் நடந்து வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு தயாநிதி மாறன், மாவட்டச் செயலாளர் திரு பி கே சேகர்பாபு, எம்.எல்.ஏ. திரு ப. ரங்கநாதன்,எம்.எல்.ஏ மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டு உள்ளனர்.