மகன் ஆர்யன் கைது செய்யப்பட்ட பிறகு மன்னிப்பு கேட்காததற்காக ஷாருக்கானை, கங்கனா ரணாவத் மறைமுகமாக கண்டித்துள்ளார்.

மகன் ஆர்யன் கைது செய்யப்பட்ட பிறகு மன்னிப்பு கேட்காததற்காக ஷாருக்கானை, கங்கனா ரணாவத் மறைமுகமாக கண்டித்துள்ளார்.

ஜாக்கி சானின் ஒரு கருத்தை அவர் பகிர்ந்துள்ள வர், ‘’போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்ட பிறகு அவரது மகனைப் பாதுகாக்க ஜாக்கிசான் மறுத்துவிட்டார்’’ எனத் தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஒரு சிறிய பகுதியை அவர் வெளியிட்டார், ’’போதைப்பொருள் வழக்கில் அவரது மகன் கைது செய்யப்பட்ட பிறகு ஜாக்கி சான் எப்படி மன்னிப்பு கேட்டார்? மகனை காப்பாற்றவும் அவர் முயற்சிக்கவில்லை. 

மகனை மற்றொரு இடத்தில் போலீசார் அழைத்துச் சென்றனர். ஜாக்கி சான் தனது மகன் 2014 இல் போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டபோது அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கேட்டார். ‘மகனின் செயலுக்கு நான் வெட்கப்படுகிறேன், இது எனது தோல்வி, அவரை காப்பாற்ற நான் தலையிட மாட்டேன்’ எனத் தெரிவித்தார். 

அதன் பிறகு அவரது மகன் 6 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார், மேலும் மன்னிப்பு கேட்டார்’’ எனத் தெரிவித்துள்ள அவர், இதனை சும்மா சொல்றேன் என்கிற ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தி இருக்கிறார்.

மும்பை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஆர்யன் கானின் ஜாமின் மனுவை நிராகரித்ததால், அவர் ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தால் அக்டோபர் 3 ஆம் தேதி ஒரு கப்பலில் நடத்தப்பட்ட சோதனையின் போது அவர் கைது செய்யப்பட்டார்.