பா.ம.க. என்றாலே அது காடுவெட்டி குருதான் என்பதை இதோ உலகம் மீண்டும் ஒப்புக் கொண்டிருக்கிறது.’ என்று தாறுமாறாக சந்தோஷப்படுகிறார்கள் குருவின் உறவினர்களும், வன்னியர் சங்கத்தின் பெரும் எண்ணிக்கையினரும். 

என்ன பிரச்னை?

காடுவெட்டி குருவின் மரணத்துக்குப் பின் வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க. இரண்டு தரப்பிலும் எழுந்திருக்கும் பஞ்சாயத்துகள் பற்றி ஏஸியாநெட் தமிழ் இணையதளம் தொடர்ந்து அப்டேட் செய்து கொண்டே இருக்கிறது. அதிலும் சில விஷயங்களை சற்று முன் கூட்டியே ஸ்மெல் செய்தும் பதிவு செய்து வருகிறது.

காடுவெட்டி குருவின் இறப்பிற்கு காரணம், ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் அவரது சிகிச்சையில் காட்டிய அலட்சியம்தான்! என்று குருவின் அம்மா மற்றும் சகோதரிகள் கொதித்திருந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு துணையாக நின்று கொண்டிருக்கும் வழுவூர் மணி எனப்படும் வி.ஜி.கே.மணி என்பவர் சமீபத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். வெளியே வந்த அவர் ‘பா.ம.க. தலைமை பற்றிய அத்தனை ரகசியங்களும் எனக்கு தெரியும்!’ என்று ஆரம்பித்து சில கொலை முயற்சிகளின் பின்னணியின் சீனியர் டாக்டரின் உத்தரவு இருந்தது, அவர் சொல்லித்தான் காடுவெட்டி குரு அதிரடி மற்றும் மிரட்டல் செயல்களில் ஈடுபட்டார் என்றெல்லாம் போட்டுத் தீட்டினார். தங்களை எல்லாமுமாக நம்பி இருந்த காடுவெட்டி குருவை அப்பாவும், மகனும் சேர்ந்து ஏமாற்றிவிட்டனர் என்றெல்லாம் குமுறியிருந்தார். 

இந்நிலையில் சமீபத்தில் மயிலாடுதுறையில் இந்த மணியும், காடுவெட்டி குருவின் மகன் கனலரசனும் இணைந்து பெரிய கூட்டத்தை நடத்தியுள்ளனர். அதில்  பேசிய கனலரசன், ‘வரும் பிப்ரவரி 1-ம் தேதி என் அப்பா குருவின் பிறந்த நாளன்று உலகம் முழுவதும் உள்ள வன்னியர்கள் காடுவெட்டியில் ஒன்று சேர்ந்து அந்த விழாவை நடத்த இருக்கிறோம். அப்போது மாவீரனுக்கு (குரு) கோயில் கட்டுவதோடு, புதிய வன்னியர் சங்கமும் பிறக்கும்.’ என்று ஆவேசமாய் பேசியிருக்கிறார். 

இதுபோதாதென்று, குருவின் அம்மா கல்யாணியோ “என் மகன் இறந்ததுக்கு பிறகு எங்களுக்கும் பா.ம.க.வுக்கும் இடையே இருந்த தொடர்பு அத்துப்போச்சு. இனிமே அவங்க கூட எங்களுக்கு எந்த சம்பந்தமுமில்லை. என் மகன் வாங்கியுள்ள ஒன்றரை கோடி ரூபாய் கடனை அடைச்சுட்டு அவனுக்கு மணிமண்டபம் கட்டுங்கன்னு ராமதாஸ்ட்ட சொன்னோம். ஆனா அவரோ காடுவெட்டி கிராமத்துல உள்ள சிலரை தூண்டிவிட்டு எங்களை அடிக்க வெச்சுட்டார். இனி அவர் கூட ஒட்டாது எங்க குடும்பமும், உறவுகளும்.” என்ரு ஒரே போடாக போட்டுவிட்டார். 

இந்த களேபரங்களைக் கண்டு மிரண்டு போயுள்ளனராம் ராமதாஸும், அன்புமணியும். காரணம், வன்னியர்சங்கம் தான் பா.ம.க.வுக்கு அடித்தளமே. வன்னியர் சங்கத்தின் வாக்கு வங்கிதான் பா.ம.க.வின் வாக்கு வங்கியே. ஆக அந்த சங்கத்தில் பிளவு வருகிறதென்றால் அது பா.ம.க.வில் ஏற்படும் பிளவே!

இதுதான் டாக்டர்களின் தீராத வருத்தமாகி இருக்கிறது.