Asianet News TamilAsianet News Tamil

சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த கனக துர்காவை அடித்து துவைத்த உறவினர்கள் !! மருத்துவமனையில் அனுமதி !!

பக்தர்களின் எதிர்ப்பை மீறி போலீஸ் பாதுகாப்புடன்  சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் நுழைந்து தரிசனம் செய்த கேரள பெண் கனக துர்காவை அவரது உறவினர்கள் அடித்து துவைத்தால் படுகாயம் அடைந்துள்ளார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

kanaga durrka attack
Author
Sabarimala, First Published Jan 15, 2019, 2:24 PM IST

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு இந்து அமைப்புகள் மற்றும் பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வந்தன. இதனால் சபரிமலையில் தடை செய்யப்பட்ட வயதுடைய பெண்களால் செல்ல முடியவில்லை.

kanaga durrka attack

ஆனால் கடந்த 2 ந்தேதி  கேரளாவை சேர்ந்த கனகதுர்கா , பிந்து அம்மிணி   என்ற 2 பெண்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில் நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்யப்பட்டன.

kanaga durrka attack

இதையடுத்து  சபரிமலையில்  நுழைந்த இந்த இரு பெண்களுக்கும் போராட்டகாரர்களால்  அச்சுறுத்தல் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று  கனகதுர்கா தனது வீட்டிற்கு திரும்பி உள்ளார்.

kanaga durrka attack

அப்போது கனதுர்காவை அவரது உறவினர்கள்  சுற்றி வளைத்து தாக்கி உள்ளனர்.. இதை தொடர்ந்து அவர் பெருந்தல்மன்னாவில் உள்ள  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios