ஏஸியா நெட் தமிழ் இணையதளத்தில் நேற்றுதான் எழுதியிருந்தோம்! எப்பவோ இறந்த காமராஜருக்கு, எப்பவோ மணி மண்டபம் கட்ட துவங்கி, இதோ இன்னமும் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் சரத்குமார்! என்று. 

இதோ  நாட்டாமையின் மேல் பஞ்சாயத்து வெடிக்க துவங்கிவிட்டது, மணிமண்டபம் கட்டிட சரத் இடம் பிடித்து வைத்திருக்கும் விருதுநகர் ஏரியாவில். மதுரை திருநெல்வேலி சாலையில் பனிரெண்டு ஏக்கர் நிலத்தை பிடித்து பெரும் பரபரப்பாக இந்த மணிமண்டபத்துக்கு அடிக்கல் நாட்டி சீன் போட்டார் அவர். உள்ளே ‘புரட்சித் திலகம் ஆர்.சரத்குமார் அவர்களின் முயற்சியால் பெருந்தலைவர்  காமராஜர்  மணிமண்டபம் அமையவுள்ள இடம்’ என்று பெருந்தலைவரின் பெயருக்கு மேலேயே தன் பெயரை பெரிதாக போடு போர்டும் வைத்தார். 

 ஆனால் இந்த சம்பவங்களெல்லாம் நடந்து முடிந்து பத்து வருடங்களாகிவிட்டது. ஆனால் இன்னமும் பத்து சதவீத பணி கூட முடியவில்லை. இந்நிலையில் ”காமராஜரின் பெயரையும், அவரது நாடார் சமுதாயத்தையும் தனது வாக்கு வங்கியாக மட்டுமே சரத்குமார் பயன்படுத்துகிறார். நினைவு மண்டபம் கட்டுவதாக சீன் போட்டது வெத்துவேட்டுத்தனம். இதைப் பற்றி சரத்குமார் சைடில் கேட்டல் ‘என்ன சாதாரண வேலையா அது! விருதுநகர்ல இருக்குற மாதிரி காமராஜரின் மாதிரி வீடு, மூவாயிரம் பேர் அமரக்கூடிய தியான மண்டபம், உணவு மண்டபம், அணையா விளக்கு, காமராஜர் பெரிய சிலைன்னு எவ்வளவு செய்ய இருக்கிறார் தெரியுமா தலைவர்! இதையெல்லாம் சொந்த காசுலதான் பண்ணிட்டிருக்கார். நடுவுல பண  நெருக்கடி வேற.’ அப்படின்னு ஆதங்கப்படுறாங்க. 

அட பண்ணனும் அப்படின்னு முடிவெடுத்தது அவர்தானே? அப்ப பண்ணித்தானே ஆகணும். எந்த காமராஜரின் பெயரை சொல்லி எம்.பி., எம்.எல்.ஏ. ஆனாரோ, எந்த காமராஜரின் பெயரை சொல்லி தனிக் கட்சி தொடங்கி வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறாரோ அந்த காமராஜருக்காக ரெண்டு படங்களில் நடிச்சு கொடுத்து காசு சேர்க்க வேண்டிதானே? இப்ப சொல்றோம், கூடிய சீக்கிரம் காமராஜருக்கு அவரு மணிமண்டபம் கட்டி முடிக்கிறது பத்தி தெளிவான அறிவிப்பை ஏமாத்துத் தனம் இல்லாம விடலேன்னா, வர்ற தேர்தல்கள்ள சரத்குமாருக்கு யாரும் ஓட்டு போட கூடாது அப்படிங்கிறதை எங்க சங்கங்கள் மூலமாகவே அறிவிக்கிற முடிவுல இருக்கோம்.” என்று ஷாக் கொடுக்கின்றனர். 

இந்நிலையில், இந்த விவகாரம் பற்றி பேசியிருக்கும் சரத்குமார்...”காமராஜர் மணி மண்டப பணிகளில் முப்பது சதவிகிதம் முடிஞ்சு போச்சு. காம்பவுண்டு சுவர் அமைப்பது, பார்வையாளர்கள் கேலரி அமைப்பது ஆகிய பணிகள் முடிஞ்சிடுச்சு. மீதமுள்ள பணிகள் விரைவாய் முடிக்கப்படும். வரும் ஜூன் மாதம் அங்கே வர்றேன், அப்போ மணிமண்டப பணிகள் பற்றி விரிவா விளக்கம் தர்றேன்.” என்று சொல்லியிருக்கார். பத்து வருஷமா முப்பது சதவீத பணிகள் மட்டுமே முடிஞ்சிருக்குறதும், சென்னையிலிருந்து இதோ இங்கே இருக்கிற விருதுநகருக்கு அவர் போறதுக்கு இன்னும் அஞ்சு மாசம் ஆகும்-ங்கிறதும் நல்லாவா இருக்குது? நாட்டாம பிளான மாத்து!