அன்பார்ந்த ஸ்டாலின், வை.கோ, திருமாவளவன், சீமான் வீணாகத் தங்கள் பேச்சாற்றலை விழலுக்கிரைக்கவேண்டாம் எனவும் எல்லாச் சிலைகளையும் அகற்றும் வாக்குறுதியை ஹெச்.ராஜா தந்தால் நாம் நம் மூதாதையார் பெரியார் சிலையை அகற்ற அனுமதிப்போம் எனவும் மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். 

மேலும் வழிபடுதல் வேறு வழிநடப்பது வேறு எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

திரிபுரா மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி புரிந்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில், மார்க்சிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. கால் நூற்றாண்டாக கோலோச்சி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாஜகவிடம் வீழ்ந்தது. இந்த நிலையில் பாஜக தொண்டர்கள் அங்குள்ள லெனின் சிலையை ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றியுள்ளனர்.

இது குறித்து பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தனது பேஸ்புக் பக்கத்தில், கம்யூனிசத்துக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, லெனின் சிலை உடைக்கப்பட்டது. திரிபுராவில் இன்று லெனின் சிலை... தமிழகத்தில் நாளை சாதி வெறியர் ஈ.வே.ரா. சிலை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹெச்.ராஜாவின் இந்த கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பல இடங்களில் ஹெச்.ராஜாவுக்கு எதிராக அவரது உருவ பொம்மையை எரித்து போராட்டமும் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், அன்பார்ந்த ஸ்டாலின், வை.கோ, திருமாவளவன், சீமான் வீணாகத் தங்கள் பேச்சாற்றலை விழலுக்கிரைக்கவேண்டாம் எனவும் எல்லாச் சிலைகளையும் அகற்றும் வாக்குறுதியை ஹெச்.ராஜா தந்தால் நாம் நம் மூதாதையார் பெரியார் சிலையை அகற்ற அனுமதிப்போம் எனவும் மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். 

மேலும் வழிபடுதல் வேறு வழிநடப்பது வேறு எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.