பகாசுரர்களை ஒழிக்க பண உதவி தேவை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நன்கொடை கேட்டுள்ளார். 

பகாசுரர்களை ஒழிக்க பண உதவி தேவை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நன்கொடை கேட்டுள்ளார். தமிழ்நாட்டில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. மொத்தம் 12838 வார்டு உறுப்பினர் பதவிகளை நிரப்ப வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பிப்ரவரி 22 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதைத் தொடர்ந்து வரும் மார்ச் 4 ஆம் தேதி மேயர், நகர்மன்ற தலைவர்களைத் தேர்வு செய்ய மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வருகிற 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக - அதிமுக கூட்டணி இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் என பலமுனை போட்டி நிலவுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28 ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய நாளை மறுநாள் கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர் ஒவ்வொரு கட்டமாக வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து வருகிறார்கள்.

Scroll to load tweet…

அனைத்துக் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களைத் தேர்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் பகாசுரர்களை ஒழிக்க பண உதவி தேவை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நன்கொடை கேட்டுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், நம்மீது திணிக்கப்பட்டிருக்கும் தரமற்ற அரசியலை மாற்றி, மக்கள்நலனை முன்னிறுத்தும் நேர்மையான அரசியலைச் செய்ய தீவிரமாகக் களத்தில் நிற்கிறோம். பகாசுர ஊழல்பேர்வழிகளை எதிர்த்துப் போராட பணஉதவி செய்யுங்களென உரிமையுடன் உங்களிடம் கேட்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.