kamalahaasan tought to mk stalin news
எந்த குறையும், தடுமாற்றமுமில்லாத பர்ஃபெக்ஷன் தான் கமல்ஹாசனின் ஆகப்பெரிய ஆளுமையே! தனது பட ஷூட்டிங்கின் போது ஜஸ்ட் கண் இமைக்கும் சீனுக்கு கூட நான்கு முறை கண்ணாடியில் இமைத்து ஒத்திகை பார்த்துவிட்டுதான் நடிக்கவே போவார்.
அப்பேற்பட்ட கமல்ஹாசன் அரசியல்வாதி அரிதாரம் பூசிய பின் பொது மேடைகளில் ஒத்திகைக்கு வழியில்லாமல் நேரடியாக மைக் பிடிக்கும் நிலையில் தடுமாற்றங்களை சந்திக்க துவங்கியுள்ளார்.

சமீபத்தில் மாபெரும் மாநாடு ஒன்றில் பேசியவர் ’ஜனவரி மாதம் 36ம் தேதி’ என்று பேசி அவனவனை அல்லில் சிரிக்க வைத்திருப்பதோடு, எக்கச்சக்க விமர்சனத்துக்கும் ஆளாகியுள்ளார்.
அவர் பேசியது இதுதான்...’இந்த மாநாட்டுக்கு வந்து கலந்து கொள்வது போல் அதே பெருமையுடன், அதே கடமையுணர்வுடன் நீங்கள் அந்த விழாக்களிலும் கலந்து கொள்ள வேண்டும். அது வந்து ஜனவரி 36ங்க, மே 1-ம் தேதி, ஆகஸ்டு 15ங்க” என்றவர் பின், தனது வாழ்க்கையின் வழிகாட்டி என்று பல வருடங்களாக சொல்லிக் கொண்டிருக்கும் மகாத்மா காந்தியின் பிறந்தநாளை சொல்வதில் தடுமாறி ‘காந்தியார் பிறந்தநாள்...ம்ம்ம் அ அஅ அக்டோபர் 2’ என்று கூறி முடித்திருக்கிறார். இந்த வீடியோவை தனியாக எடுத்து வைத்து பேசும் விமர்சகர்கள் ‘வணிகர் சங்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசும்போது இப்படி பேசியிருக்கிறா என்று தெரிகிறது.
அந்த மாநாட்டில் கலந்து கொள்வது போல் தேசத்தின் மிக முக்கிய நாட்களான இந்திய குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதி நடக்கும் விழாவிலும் கலந்து கொள்ள வேண்டும் என்று கூற வந்தவர் அந்த தேதியை ஜனவரி 36 என்று மாற்றி உளறிவிட்டார்.
மேடைப்பேச்சில் தடுமாற்றங்கள் இயல்புதான். ஆனால் Factual Mistakes எனும் மாறாத உண்மைகளை பிழையாய் குறிப்பிடுவது இவர் போன்ற மிகப்பெரிய ஆளுமைகளுக்கு அழகல்லவே! 
மேலும் வார்த்தைக்கு வார்த்தை மகாத்மாவின் வாழ்க்கையை மேற்கோள் காட்டுபவர், அவரது பிறந்தநாளை குறிப்பிடுவதிலேயே குழம்பியது கமலின் கம்பீரத்துக்கு அழகல்ல.
Error is Human- என்று சொல்லி அவர் விமர்சனங்களில் இருந்து எஸ்கேப் ஆகி சென்றுவிட முடியாது. காரணம், பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டால் அவரது ஒவ்வொரு அசைவும் புகழவும் படும், விமர்சிக்கவும் படும், கொண்டாடவும் படும், குதறவும் படும்.
யானை பழமொழிக்காக ஸ்டாலின் வாங்கிக் கட்டியது போல் ஜனவரி 36-க்காக கமலும் விமர்சனங்களை எதிர்கொள்ளத்தான் வேணும்.
ஏனென்றால் இது ஜனநாயக தேசமல்லவா?!” என்று கண்ணடிக்கிறார்கள்.
ஒரு தேதிக்கு இப்படி அக்கப்போராய்யா?!
