Asianet News TamilAsianet News Tamil

நீங்கலாம் ஏன் அரசியலுக்கு வந்தீங்க..? கமல் ஆதங்கம்

kamal you tube live speech
kamal you tube live speech
Author
First Published Apr 22, 2018, 4:18 PM IST


மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், இன்று யூ டியூபில் நேரலையாக பேசினார். அப்போது கடிதம் மூலம் அவருக்கு வந்த சில கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, நீர் நிலைகளை சுத்தப்படுத்த வேண்டும். நீர்நிலைகளை சுத்தப்படுத்த வேண்டியது நமது கடமை. பள்ளிகள், அதற்கு தேவையான உதவிகளை செய்வதற்கும் தன்னார்வலர்கள் வேண்டும். முதல்கட்டமாக அதிகதூர் என்ற கிராமத்தை தத்தெடுத்துள்ளோம். கிராமத்தை தத்தெடுப்பதற்கு முதலில் அந்த கிராம மக்களுடனும் ஊர் பெரியவர்களுடனும் பேச வேண்டும். அதற்கு பிறகு தான் தத்தெடுக்க முடியும். அடுத்து தத்தெடுக்கப் போகும் கிராமங்களின் பட்டியல் பின்னர் வெளியிடப்படும் என கமல் தெரிவித்தார்.

அரசியலுக்கு வர வேண்டும் என்பது திடீரென எடுத்த முடிவல்ல. பல பல வருடங்களாக யோசித்து எடுத்த முடிவு. ஓட்டு அரசியலுக்கு ஏன் வர வேண்டும் என்று நினைத்து தான் அரசியலுக்கு வராமல் இருந்தேன். நம்முடைய அஜாக்கிரதையால் அரசியலை மோசமான நிலைக்கு தள்ளி விட்டோம் என்ற குற்ற உணர்ச்சி உள்ளது. எல்லோரும் கண்டுகொள்ளாமல் விட்டதால் யாரும் கேள்வி கேட்க கூடாது என்ற நிலை வந்து விட்டது. அதை மாற்ற மீடியாக்கள் மூலம் முயற்சித்தேன். மீடியா என்பது ஒரு ஆராய்ச்சி மணி தான். மக்கள் மற்றும் மீடியாவின் கேள்விக்கு ஏன் பதிலளிக்க வேண்டும் என்ற ஆணவம் ஆட்சியாளர்களுக்கு வந்துவிட்டது. இதற்கு தீர்வு காணவே அரசியலுக்கு வந்திருக்கிறேன். 

நிஜமாக அரசியல் செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் நிறைய படி ஏறி செல்ல வேண்டும். இறங்கி வர வேண்டும் என்பது கர்வம். ஏன் அரசியலுக்கு வந்தோம் என்று தோன்றவில்லை. ஆனால் சிலரை பார்த்து "நீங்கலாம் ஏன் அரசியலுக்கு வந்தீர்கள்" என கேட்க தோன்றுகிறது. நல்ல அரசியல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அடுத்த தேர்தலில் முதல்வர் அல்லது எதிர்க்கட்சி தலைவர்; இவற்றில் எதுவாக வேண்டும் என நினைக்கிறீர்கள் என என்னிடம் கேட்கிறீர்கள். ஆனால் நான் என்ன ஆக வேண்டும் என நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என கமல் பேசினார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios