Kamal who took the electrical demand
நமக்குத் தேவையான மின்சாரத்தை நாமே தயாரிக்கும் தொழிநுட்பம் பற்றி அமெரிக்காவில் நடிகர் கமல் ஆலோசனை செய்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் அவ்வபோது ஆளுங்கட்சியான எடப்பாடி ஆட்சியை விமர்சித்து வந்தார். இதற்கு அமைச்சர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
ஆனால் நடிகர் கமல் அதற்கு பதிலுக்கு பதில் பதிலடி கொடுத்து வந்தார். இவை அனைத்தையும் தமது டுவிட்டர் மூலமே பரப்பி வந்தார். அதற்கும் மீடியாக்கள் செவி சாய்த்தன.
இதையடுத்து அவர் களத்தில் இறங்கட்டும் அப்புறம் பேசட்டும் என அமைச்சர்கள் ஏவி விட்டனர். அதே போல் தாம் அரசியலுக்கு வருவது உறுதி என நடிகர் கமல் தெரிவித்தார்.

இந்நிலையில் ரசிகர்களை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார் கமல். இதையடுத்து 'நாளை நமதே' என்ற பெயரில் தனது அரசியல் சுற்றுப்பயணத்தை துவங்கவிருக்கிறார் கமல்.
கமல் அரசியல், கிராமம் தத்தெடுப்பது என்று ஒரு பக்கம் சென்றுக்கொண்டிருக்க, அவரது ரசிகர்களோ வியக்கக்கூடிய காரியத்தை செய்திருக்கிறார்கள். அவரது திருவள்ளூர் மாவட்ட ரசிகர்கள் பலர், சென்னை பெசன்ட் நகர் கடற்கரயில் தூய்மை செய்யும் பணிகளை துவக்கியுள்ளனர்.

இந்நிலையில், நமக்குத் தேவையான மின்சாரத்தை நாமே தயாரிக்கும் தொழிநுட்பம் பற்றி அமெரிக்காவில் ப்ளூம் பாக்ஸை கண்டறிந்த தமிழர் டாக்டர் கே.ஆர்.ஸ்ரீதரை சந்தித்து நடிகர் கமல் ஆலோசனை செய்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் ப்ளூம் பாக்ஸை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கமல் தமிழர் டாக்டர் கே.ஆர்.ஸ்ரீதரிடம் ஆலோசித்துள்ளார்.
