மக்களவைத்தேர்தல்,மற்றும் தமிழக இடைத் தேர்தல்களில் பெரும்பாலான தொகுதிகளில் 4 வது ஐந்தாவது இடத்தையே பிடித்திருக்கும் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி அவரது சொந்தத் தொகுதியான பரமக்குடியிலும் இருக்கும் இடம் தெரியாத அளவுக்கு மண்ணைக் கவ்வியுள்ளது.

இன்று காலை முதல் வெளிவந்துகொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளில் சீமானின் நாம் தமிழர், தினகரனின் அமமுக, கமலின் மக்கள் நீதி மய்யம் ஆகிய மூன்று கட்சிகளுமே மிகப்பரிதாபமான  3வது, 4 வது, 5வது இடங்களுக்குத் தள்ளப்பட்டனர். சீமானின் நிலவரம் ஏற்கனவே தெரிந்ததுதான் எனும் நிலையில், தினகரன் கட்சியின் தோல்வியும் கமல் கட்சி ஒரு இடத்தில் கூட டெபாசிட் கூட வாங்காதது பொதுமக்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் கமலின் சொந்த பூமியான பரமக்குடியில் அவர் கட்சி வேட்பாளர் இருக்கிற இடம் கூட தெரியாமல் தோற்றது கமல் தொடர்ந்து அரசியலில் நீடிப்பாரா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்தியுள்ளது. கமல் சென்னை வளர்ப்புதான் என்றாலும் தந்தை பிறந்து வளர்ந்த பூமி என்பதாலும் இளம் பிராயத்தில் அதிகம் செலவழித்த இடம் என்பதாலும் பரமக்குடிக்காரன் என்று எப்போதுமே பெருமை பொங்க சொல்லிக்கொள்பவர். ‘மாமனுக்கு பரமக்குடி மச்சினிக்குத் தூத்துக்குடி’ என்று நிறைய சொந்த ஊர்ப் பெருமை பீத்தும் பாடல்களும் படங்களில் அவருக்காக எழுதப்பட்டுள்ளன.