Asianet News TamilAsianet News Tamil

நீயெல்லாம் எங்க கேப்டனை பத்தி பேசுற அளவுக்கு நாங்க ஆயிட்டோமே... கமல் பிஆர்ஓ வை கழுவி வூத்தும் தேமுதிக..!

”கட்சிகள் ரெண்டு ரகம். ஒன்று! மக்களை களத்தில் சந்தித்து, தங்களின் கொள்கைகளை எடுத்துச் சொல்லி, மக்களின் பிரச்னைகளை பகிர்ந்து கொண்டு, தேர்தலை சந்தித்து வெற்று பெற முயற்சிப்பது. இன்னொன்று! எதையாவது செய்து தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்று திரிவது. இதில் நாங்கள் முதல் ரகம். மக்கள்தான் எங்களின் முதலாளிகள்.

kamal team attack vijayakanth
Author
Tamil Nadu, First Published Mar 20, 2019, 5:39 PM IST

மக்கள் நீதி மய்யம் தொடர்பான அரசியல் கருத்துக்களை ஒன்று கமல்ஹாசனே சொல்ல வேண்டும் அல்லது அவரது அனுமதி பெற்ற பின் தான் நிர்வாகிகள் சொல்ல வேண்டும்! என்பது அக்கட்சியின் (?!) நிலை உத்தரவு. ஆக அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் சொல்லும் கருத்தென்பதை கமலின் சொந்தக் கருத்தாகத்தானே எடுத்துக் கொள்ள வேண்டும்!

அந்த வகையில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரான முரளி அப்பாஸ் சமீபத்தில் விஜயகாந்தின் முகமாக விளங்கும் தே.மு.தி.க. பற்றி சொல்லியிருக்கும் கருத்து, கேப்டன் கட்சியினரை கன்னாபின்னாவென கடுப்பாக்கி இருக்கிறது. kamal team attack vijayakanth

அப்டி என்ன சொல்லிட்டார் அப்பாஸ்?... ”கட்சிகள் ரெண்டு ரகம். ஒன்று! மக்களை களத்தில் சந்தித்து, தங்களின் கொள்கைகளை எடுத்துச் சொல்லி, மக்களின் பிரச்னைகளை பகிர்ந்து கொண்டு, தேர்தலை சந்தித்து வெற்று பெற முயற்சிப்பது. இன்னொன்று! எதையாவது செய்து தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்று திரிவது. இதில் நாங்கள் முதல் ரகம். மக்கள்தான் எங்களின் முதலாளிகள். (பாஸ் இதையெல்லாம் நாங்கள் ‘களத்தூர் கண்ணம்மா’ காலத்திலேயே கேட்டுட்டோம்!). அவர்களின் மதிப்பை பெறுவதின் மூலம் மட்டுமே பதவி, அதிகாரத்தை அடைய நினைக்கிறோம். kamal team attack vijayakanth

இரண்டு பெரிய கட்சிகளின் சித்தாந்தங்களையும் எதிர்க்கும் எங்களால் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. என இருவருடனும் சேர முடியாது. ஊழல் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்காக இன்றளவும் அவர்களை திட்டுகிறோம். அக்கட்சியின் இந்த நிலைக்கு முக்கிய காரணமாக இருந்தது சசிகலா மற்றும் தினகரன். எனவே அவர்களுடன் எங்களால் சேர முடியாது. இடதுசாரிகள் உட்பட சிறிய கட்சிகளை அழைத்தோம், ஆனால் அவர்களும் பதவிதான் முக்கியமென பெரிய கட்சிகளுடன் சென்றுவிட்டார்கள். 

எனவே தனித்து நிற்பதே தனி சிறந்தது! என தனித்து நிற்கிறோம். தனித்து நின்றபோது எட்டு பர்சன்டேஜ் வாக்குகளை வாங்கிய தே.மு.தி.க.வுக்கு இருந்த மரியாதை இப்போது இல்லையே. கூட்டணி சேர்ந்த பிறகு அக்கட்சியின் மரியாதை போய்விட்டது தானே! எனவேதான் மக்கள் எங்களை மதிப்பார்கள் எனும் நம்பிக்கையில் தனித்து நிற்கிறோம்.” என்று தட்டி எறிந்துள்ளார். அப்பாஸின் இந்த ஸ்டேட்மெண்டை பார்த்துவிட்டு அநியாயத்துக்கு டென்ஷனாகியுள்ளனர் தே.மு.தி.க.வினர். ‘எங்கள் தலைவர் பற்றி கமல் சொல்லிக் கொடுத்துள்ள வார்த்தைகளைத்தான் அவரது கட்சி பி.ஆர்.ஓ. சொல்லியுள்ளார். kamal team attack vijayakanth

கமலுக்கு அப்படி என்ன ஏற்றம்? உருப்படியான எந்த கொள்கையுமில்லாமல், யாரோ ஒரு பெரிய மனிதரின் தூண்டுதலின் பேரில், பெரிய ஆதாயத்துக்காக கட்சி துவக்கி சீன் போட்டுக் கொண்டிருக்கும்  இவரெல்லாம் இரண்டே தேர்தல்களில் தமிழகத்தின் எதிர்கட்சி தலைவர் நிலைக்கு சென்ற எங்கள் கேப்டனை பற்றி இப்படி பேசலாமா? தே.மு.தி.க.வை விமர்சிப்பது என்பது கேப்டனை விமர்சிப்பதுதான். கமல் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.” என்று சவுண்டு விடுகிறார்கள். 
நீங்க பதில் சொல்லுங்க கமல்!

Follow Us:
Download App:
  • android
  • ios