kamal supporters started to say vaalga vaalga kamal vaalga
தமிழகத்தில் கல்வி, சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து ஆகியவை சரியாக இல்லை..எனவே கல்வி, சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து ஆகியவற்றை சரிசெய்யவே நான் வந்துள்ளேன் என்று நடிகர் கமல், சென்னை வேளச்சேரியில் கனரா வங்கி டிஜிட்டல் கிளை திறப்பு விழாவில்,தன்னுடைய ரசிகர்கள் மத்தியில் தெரிவித்து உள்ளார்.
என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடையச் செய்வேன் என்றும், இந்தியாவின் பெருமை தமிழகத்தில் இருந்து தொடங்கும் அதற்கான பயணம் அடுத்த மாதத்தில் இருந்து தொடங்க உள்ளேன் என்றும் தெரிவித்து உள்ளார். அப்போது பல சகோதரர்கள் கிடைப்பார்கள் என்றும் கூறி உள்ளார்.

ரசிகர் மன்ற நற்பணியின் வீச்சு இன்னும் அதிகமாகப் போகிறது,
நற்பணி இயக்கத்தை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்த வேண்டிய நேரம், கடமை வந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
பிப். 24ம் தேதி மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக வந்த தகவலுக்கு நடிகர் கமல் மறுப்பு தெரிவித்து உள்ளார்.
இதனை தொடர்ந்து கமலுக்கு ஆதரவாக,ஒருகூட்டம் கமல் வாழ்க..தலைவன் வாழ்க...ஆளவந்தான் வாழ்க என கோஷம் போட தொடங்கி உள்ளனர்
இதுவரை மக்கள் மத்தியில், ஒரு நடிகராக இடம் பிடித்த கமலுக்கு தற்போது, ரசிகர்கள் கூட்டம் அப்படியே கட்சி தொண்டர்களாக மாறி உள்ளனர் என்று சொல்லலாம்.
