kamal reply to minister jayakumar

என்னை ஒரு அமைச்சர் எறும்பு என்று சொல்கிறார்… ஆனால் இந்த எறுப்பு யானை காதுக்குள் புகுந்தால் என்ன ஆகும் தெரியுமா என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாள்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், கமல் எங்கே இருக்கிறார்? அவர் திடீரென்று ட்விட்டரில் வருவார். இல்லை என்றால் பேஸ்புக்கில் வருவார்; யூட்யூபில் வருவார். பார்த்துக் கொண்டே இருங்கள். இனிமேல் எஸ்.எம்.எஸ்ஸில் தான் வருவார்.

சுருக்கமாக சொல்வதென்றால் என்னமோ தேய்ந்து கட்டெறும்பு ஆனது என்பார்களே. அதுபோல கமல் கட்டெறும்பிலிருந்து சிற்றெறும்பாகி பின்னர் அரசியலில் காணாமலே போய் விடுவார். எனக்கூறினார்.

இந்நிலையில் சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாதிரி கிராம சபை கூட்டம் ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாதிரி கிராம சபை கூட்டத்தை கமல்ஹாசன் தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது என்னை சிலர் எறும்பு எனக்கூறுகிறார்கள், ஆனால், யானை காதில் எறும்பு புகுந்தால் என்னவாகும், எனவே, வார்த்தை ஜாலங்களில் நுழையாமல் செயல்படுவோம் என அமைச்சர் ஜெயகுமாருக்கு பதிலடி கொடுத்தார்.