kamal planning to join with rajini in politisc

ரஜினி விரும்பினால்,அவருடன் சேர்ந்து அரசியலில் இறங்க தயார் என நடிகர் கமல் தெரிவித்துள்ளார்

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் அரசியல் சூழ்நிலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசல் காரணமாக நிலவி வரும் பல குளறுபடிக்கு தீர்வு காணும் வகையில் தற்போது நடிகர் கமல் அரசியலில் குதிக்க திட்டமிட்டுள்ளார்.

இதற்காக தனியார் தொலைக்காட்சி ஒன்றில், அவர் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இடையே பலமுறை, அரசியல் வாதிகளை எதிர்த்து பேசி வந்தார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகர் கமல் அரசியலுக்கு வர முன்வந்துள்ளார்.

இது குறித்து வெளிப்படையாக பேசிய கமல், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர விருப்பம் தெரிவித்தால், அவரை இணைத்துக்கொள்வேன் என கமல் தெரிவித்துள்ளார்

மேலும் மக்கள் விரும்பினால் அரசியலுக்கு உடனே வருவேன் எனவும் தெரிவித்துள்ளார் .தற்போது நடிகர் கமலின் இந்த அறிக்கை மக்களிடேயே ஹாட் டாப்பிக்காக இருக்கிறது