தமிழ்த்திரையுலகில் மாபெரும் நட்சத்திரங்களாகவும் வெற்றி நாயகர்களாகவும் இன்றளவும் நிலைத்திருப்பவர்கள் கமலும் ரஜினியும். இந்த இருவரும் இணைந்து ஒரு படம் மீண்டும் நடிக்க மாட்டார்களா? என்ற ஏக்கம் தமிழ் ரசிகர் மத்தியில் சில காலம் வரை இருந்தது. ஆனால் தற்போது இந்த ஏக்கம் வேறுவிதமாக மாறி இருக்கிறது.

செல்வி.ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் தற்போது தமிழகத்தில் பல மாபெரும் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அப்படிப்பட்ட மாற்றங்களில் மிக குறிப்பிடத்தக்கது தான் கமல் மற்றும் ரஜினியின் அரசியல் வரவு. மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்டிருக்கும் இந்த இருவரும், இப்போது அரசியலில் அடியெடுத்து வைத்திருப்பது பல அரசியல் தலைவர்களுக்கும் ஆச்சரியத்தினையும் அதிர்ச்சியையும் அளித்திருக்கிறது.

இதில் மக்கள் மய்யம் என்ற பெயரி கட்சி தொடங்கி நடத்தி வரும் கமலஹாசன் சமீபத்தில் ஒரு பேட்டியின் போது ரஜினியுடன் இணைந்து அரசியல் செய்வது கூறித்து கூறி இருக்கிறார்.

பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியின் போது அவரிட தற்போது நீங்களும் ரஜினிகாந்தும் தனி தனி பாதையில் அரசியலில் இருக்கிறீர்கள். நீங்கள் இருவரும் இணைந்தால் அவெஞ்சர்ஸ் படம் போல அதிரடியாக இருக்கும் என மக்கள் கூறுகிறார்களே? என ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

அப்போது கமலஹாசன் ”ரஜினியுடன் நான் இணைந்து நாங்கள் கூட்டணியாக அரசியலில் ஈடுபடும் பட்சத்தில் எங்களை தோற்கடிப்பது என்பது முடியாத காரியம்” என  தெரிவித்திருக்கிறார். ஆனால் இதே கமலஹாசன் தான் சில மாதங்களுக்கு முன்னர் பேட்டியின் போது ரஜினி செய்வது ஆன்மீக அரசியல் என்றால் யோசிக்க வேண்டும். என சூசகமாக பதில் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.