Asianet News TamilAsianet News Tamil

“பொன்னாடைக்கு பதில் கட்டிப்புடி கட்டிப்புடிடா...” ஆண்களுக்கு சரி மற்றவர்களுக்கு? சாத்தியமாகுமா?

kamal hug For men right Is it possible
kamal hug For men right Is it possible
Author
First Published Feb 21, 2018, 12:30 PM IST


ஆண்டவரின் அரசியல் பயணம் இன்று அப்துல்கலாமின் பிறந்த மண்ணான ராமேஸ்வரத்திலிருந்து தொடங்குகிறார். இது தொடர்பாக இன்று காலை செய்தியாளர்கள், மீனவர் சங்க பிரதிநிதிகள் கமலஹாசனை சந்தித்து பேசினார்கள்.

அப்போது அவர்களிடம் கோரிக்கையை கேட்டறிந்த அவர் அப்போது, நீங்கள் எல்லோரும் இங்கே என்னை பார்க்க வந்துள்ளீர்கள் ஆனால் உங்களை வரவேற்று பொன்னாடை போற்றும் பழக்கம் நம்ம கட்சியில் பொன்னாடை போற்றுவது இல்லை அதற்கு பதிலாக கட்டிப்பிடி தான் என  அந்த மீனவர் சங்க நிர்வாகிகளை கட்டி தழுவினார்.

அதென்ன கட்டிப்பிடி வைத்தியம் அது எதற்காக? நம்ம மக்களுக்கு அன்பு காட்ட நேரமே இல்லாமப்போனதால்தான் உலகத்தில இருக்கவே கூடாத மன உளைச்சல்கள் வெறுப்பு கோபம், சண்டை, சச்சரவு, பொறாமை, மன அழற்சி இன்னும் பற்பல நோய்கள் எல்லாம் கணக்கிலடங்காம குப்பைகளாக நிரம்பி குமிந்துள்ளன.

kamal hug For men right Is it possible

சந்தோஷமான ஆழ்மனதில் இருந்து வரும் சிரிப்பும் அன்பான அரவணைப்பும் இந்த வேண்டா நோய்களை மனிதர்களிடமிருந்து தூர விரட்டுமென்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆரத்தழுவுதல் அல்லது அரவணைத்தல் தனிமை, மனச்சோர்வு, மனக்கலக்கம் மற்றும் மனஅழுத்தத்தை குணப்படுத்தி விரட்டியடிக்குமாம் இந்த கட்டிப்பிடி வைத்தியம்.

இதையேத்தான் வசூல் ராஜா MBBS, படத்தில் கமல்ஹாசனும் முன்னாபாய் MBBS, படத்தில் சஞ்சய் தத்தும் அன்பா அணைப்பாங்களே ஒரு தாய் குழந்தையை அணைப்பதுபோல அந்த அணைத்தலைத்தான் குறிப்பிடுகிறேன். அன்பா அரவணைக்கும்போது மன பாரங்கள் இறக்கி மனசு ரிலாக்ஸாக உணரும் என்றும் கூறுகிறார்கள்.

kamal hug For men right Is it possible

கமலின் ஸ்டைலை ஃபாலோ பண்ணித்தான் தனியார் தொலைக்காட்சியில் உலக நாயகன் நடத்திய பிக் பாஸ்  வீட்டில் உள்ள பெண் போட்டியாளர்களின் கண்களில் நீரை பார்த்துவிட்டால் கவிஞர் சினேகன் ஓடி வந்து கட்டிப்பிடித்து தடவித் தடவி தடவி ஆறுதல் சொல்வார். பெண்களே விலகிச் சென்றாலும் இவரே சென்று கட்டியபடி வைத்தியத்தை அப்ளை பண்ணுவார். இதனால் அவருக்கு டாக்டர் என சமூக வலைதளங்களில் பெயர் வைத்து கலாய்த்தனர்.  

பொன்னாடை போற்றுவதும், பூச்செண்டு, எலுமிச்சை பழம்  மரியாதை நிமித்தமாக கொடுப்பதும் காலம் காலமாக அரசியலில் இருந்து வருகிறது. ஆனால், இந்த சம்பரதாயத்தை அடியோடு மாற்ற நினைக்கிறாரா?

kamal hug For men right Is it possible

மனிதர்களை கண்டதும்கை கூப்பி வணங்கும் பாரம்பர்யம் மிக்க நம் தமிழகத்திற்கு இந்த கட்டிப்பிடி வைத்தியம் கொஞ்சம் சங்கடமா தான் இருக்கும். ஆண்களுக்கு சரி மற்றவர்களுக்கு எப்படி கடை பிடிக்க முடியும்? இது ஆண்டவரால் சாத்தியமாக்க முடியுமா?

வணங்குதலும், சால்வை தந்து வாழ்த்துதலுமே தமிழகத்தின் அரசியல் பண்பாக இது நாள் வரை இருந்து வந்தது. ஆனால், இன்று கமல் அரசியலில் அடியெடுத்து வைக்கும் இந்த நாளிலிருந்து வட இந்திய வாழ்வியல் கலாச்சாரத்தை கற்றிருக்கும் இந்த கட்டிப்பிடி கலாசாரம் இன்று கமல்ஹாசனால் தமிழகத்தினுள்ளும் அது அடியெடுத்து வைத்துள்ளது என்கிறார்கள் விமர்சகர்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios