Kamal hassan will not come a leader told tamilisai

இன்று புதிய கட்சியைத் தொடங்கவுள்ள நடிகர் கமல்ஹாசன், தலைப்புச் செய்தியாகலாமே தவிர தலைவர் ஆக முடியாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கிண்டல் செய்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் இன்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். அப்துல் கலாமின் சகோதரர் முத்து மீரான் மரைக்காயரை சந்தித்த கமல்ஹாசன், அவரிடம் ஆசி பெற்றார்.

தொடர்ந்து மீகவர்களை சந்திக்கும் கமல் பின்னர் அப்துல் கலாமின், நினவிடத்துக் செல்கிறார்.

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை, நடிகர் கமல்ஹாசன் தலைப்புச் செய்தியாகலாமே தவிர, தமிழகத்தில் ஒரு தலைவராக முடியாது என கூறினார்.

கமல் அவசர, அவசரமாகமாக கட்சி தொடங்கியுள்ளதாகவும், ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்தவுடன் அவருக்கு முன்பாக கட்சி தொடங்க வேண்டும் என்ற கட்டாயத்தில் புதிய கட்சியைத் தொடங்கியதாக கூறினார்.

நிச்சயமாக கமலஹாசன் தனத அரசியல் பயணத்தில் தோல்வி அடைவார் என தமிழிசை குறிப்பிட்டார்.