kamal hassan went to gopalapuram ans enquiry about karunanidhi

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து சென்னை கோபாலபுரத்திற்கு நேரில் சென்று மு.க.ஸ்டாலினிடம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹசான் நலம் விசாரித்தார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார்.

வயோதிகம் காரணமாக அவர் நலிந்து உள்ளதாகவும், சிறுநீரக தொற்று காரணத்தால் காய்ச்சல் உள்ளதாகவும் காவேரி மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில், கருணாநிதியை சந்திக்க துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி ஆகியோர் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தனர். ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து அவர்கள் கேட்டறிந்தனர்.

அவர்களை தொடர்ந்து, ஜிகே வாசன், திருமாவளவன், கே.பாலகிருஷ்னன் ஆகியோரும் கோபாலபுரம் வந்தனர்.

இதையடுத்து சிறிது நேரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் அங்கு வந்து, ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்து புறப்பட்டுச் சென்றார்.