திருமணத்தில் கட்டிப்பிடி வைத்தியத்தை கலாச்சாரமாக மாற்ற முயன்றவர் சினேகன். அந்த கட்டிப்பிடி வைத்தியத்தை தனது திருமணத்தில் கடைபிடிப்பாரா சினேகன் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். 

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிரபல நிகழ்ச்சி ‘பிக்பாஸ்’ அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்றவர் சினேகன். அதோடு தமிழ் சினிமாவால் ஹிட்டடித்த பல பாடல்களையும் எழுதியுள்ளார். மேலும் சில படங்களிலும் நடித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கமல் மீது கொண்ட பற்றால் கமல் ஆரம்பித்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து தீவிரமாக பணியாற்றினார். மேலும் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியிலும் போட்டியிட்டார். ஆனால் அதில் தோல்வியை தழுவினார். இந்நிலையில் 42 வயதான சினேகனுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இவரது திருமணத்துக்கு நிச்சயம் கமல்ஹாசன் வருகை தந்து தலைமையேற்பார் என்று கூறப்படுகிறது.

திருமணத்தில் கட்டிப்பிடி வைத்தியத்தை கலாச்சாரமாக மாற்ற முயன்றவர் சினேகன். அந்த கட்டிப்பிடி வைத்தியத்தை தனது திருமணத்தில் கடைபிடிப்பாரா சினேகன் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.