பாத்ரூமிற்குள் கமல் ஹாசனுக்கு நேர்ந்த சங்கடத்தால் அவர் நெளிந்து நெற்குறுகிப்போனதாக பாஜக பிரமுகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்துப்பேசிய அவர், ‘’சகோதரர் கமலஹாசன் அமெரிக்கா சென்றார். அங்கு அவரை 7 மணி நேரம் உட்கார வைத்து விட்டனர்.  அவரை கழிவறைக்கு செல்லக் கூட அனுமதிக்கவில்லை. அவர் பெயர் கமலஹாசன் என வைத்துள்ளதால் இந்த பிரச்சினை ஏற்பட்டது. அவரை இஸ்லாமியர் என நினைத்து விட்டனர்.

நமது சகோதரர் கமலஹாசன் ஆங்கிலத்தில் பேசியது இங்கே அமைச்சர் ஸ்மிரிதி ராணியிடம் எடுபடவில்லை. அந்தப் பெண் அமைச்சர் பிறக்கும்போதே ஆங்கில அறிவோடு பிறந்தவர். அவரை சமாளிக்க முடியாமல் டிவி விவாத நிகழ்ச்சியில் கமல்ஹாசன் படபடப்பில் கோட்டை கழட்டி விட்டார். பாவம் கமலஹாசன் நல்லவர்தான். இன்னொன்று அவர் பேசுவது யாருக்கும் புரியாது. அப்படி இருந்தால் தான் நல்லது. அவர் பேசுவது பிரிந்து போய்விட்டால் யாராவது அவருக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்து விடுவார்கள். அமெரிக்காவில் கமல்ஹாசன் பாத்ரூம் செல்ல வேண்டும் என்றாலும் கூட அவருடன் ஒரு போலீஸை கூடவே வைத்து கண்காணித்தார்கள். 

பாத்ரூம் சென்ற போது கூட போலீஸ் கூடவே வந்ததால் கமலஹாசன் சங்கடம் ஏற்பட்டது. இப்படி எல்லாம் போட்டு கசக்கினார்கள் நமது கமலஹாசனை. நீங்கள் முஸ்லிமா என கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த ’கமலஹாசன் நான் முஸ்லிம் இல்லை இந்து’என்று கூறியுள்ளார். 16 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று அவர் தான் ஒரு இந்து தான் எனக் கதறி இருக்கிறார். இங்கே இந்தியாவில் இப்போது சொல்லுங்கள் நீங்கள் ஒரு இந்து என்று. இங்கு அவரால் தன்னை ஒரு இந்து என்று சொல்ல அவமானப் படுகிறார். 

இந்துக்களை தீவிரவாதி இருக்கிறார் நீ இந்துவா? இல்லையா? உங்கள் அம்மா -அப்பா இந்துவா? இல்லையா? அதை முதலில் சொல்லுங்கள். நீ யாருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். கமலஹாசன் ரொம்ப அறிவாளி போல கட்டிக் கொள்கிறார். அவருக்கு மட்டும்தான் ஆறு அறிவு இருப்பது போலவும் சிலருக்கு மூன்று அறிவு இருப்பதாக அவர் காட்டிக் கொள்கிறார்’’என ராதரவி கடுமையாக விமர்சித்துள்ளார்.