பெண்களின் ஓட்டுகளை வாங்குவதற்காக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அரசியல்வாதிகள் பூச்சாண்டி காட்டுவதாகவும், மது விலக்கு என்பது சாத்தியமே இல்லை என்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வந்தாலே திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என தெரிவிப்பார்கள். கடந்த தேர்தலில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முக்கிய தேர்தல் அறிக்கையே மது விலக்குதான். ஆனால் இன்று வரை தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் தமிகத்தில் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமே இல்லை என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மதுவை உடனடியாக நிறுத்த உடம்பு கேட்காது.  இது உடம்பு கேட்கும் வியாதி என தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த சமுதாயத்தினையும் மதுவை விரும்பாதவர்கள் ஆக்க முடியாது என்றும்.  அப்படி அவர்களை மாற்றினால் கள்ளினால் வரும் கொடுமைகளை விட பல கொலைகள் நடக்கும என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குடிப்பதனை குறைக்கலாம்.  ஆனால் ஒட்டுமொத்தம் ஆக நிறுத்த முடியுமா? என்பது சந்தேகம் தான் என்றும்,  பெண்களின் ஓட்டுகளை வாங்குவதற்காக பூரண மதுவிலக்கு என்று அடிக்கடி பூச்சாண்டி காட்டாதீர்கள் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.