kamal hassan praising karunanidhi

இந்தியாவின் ஆகச் சிறந்த அரசியல்வாதிகளில் ஒருவரான திமுக தலைவர் கருணாநிதி,எதிர்வரும் ஜூன் 3 ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். 

இத்தினத்தை திமுக, வைர விழாவாகக் கொண்டாட உள்ளது. 
அண்ணாவால் அரசியலில் வளர்ந்தவர் கருணாநிதி. இவரது தமிழால் உச்சம்பெற்றவர்கள் பலர். அந்தப் பட்டியலில் கமல்ஹாசனும் ஒருவர்.

களத்தூர் கண்ணம்மாவில் சிறுவனாய் கையெடுத்துக் கும்பிட்ட கமல்ஹாசனை இன்று இந்திய சினிமாவே திரும்பிப் பார்க்கும் வகையில் விஸ்வரூபமாய் வேற லெவலுக்கு கொண்டு போய் சேர்ந்திருக்கிறது கருணாநிதியின் வசனங்கள்.

தன்னை வளர்த்து விட்ட கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து மூலம் பூகழராம் சூட்டி நன்றி தெரிவித்திருக்கிறார் கமல்ஹாசன். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred



இது குறித்து தொலைக்காட்சிகளுக்கு கமல்ஹாசன் பேட்டியளிக்கையில்," எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தவர்கள் கருணாநிதி, கண்ணதாசன், சிவாஜி கணேசன்.கருணாநிதியை தமிழ் ஆசான் என்று கூறியதற்கு எம்.ஜி.ஆரும் போனில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். தசாவதாரம் படத்தின் போது எனது கன்னத்தை கிள்ளி பாராட்டு வழங்கியவர் கருணாநிதி." 

"சட்டமன்றத்தில் 60 ஆம் ஆண்டு நிறைவு தினத்தை கொண்டாடுவதற்கு எவ்வளவு இளமையில் அவர் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். அவரது வைர விழாவுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்கு வயது தேவையில்லை. மனம் இருந்தால் போதும்."