kamal hassan paid homage to kalam school

அப்துல் கலாம் பயின்ற பள்ளிக்கு செல்ல நடிகர் கமலஹாசனுக்கு தடை விதிக்கப்பட்டதால், அந்த பள்ளியின் முன்பு காரை நிறுத்தி அதை நோக்கி வணங்கினார்.

புதிய கட்சி தொடங்கும் நடிகர் கமலஹாசன், இன்று காலை சரியாக 7.35 மணிக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், வீட்டிற்கு சென்றார். அவரை அப்துல் கலாமின் பேரன் சலீம் வரவேற்று அமர வைத்தார்.

இதையடுத்து அப்துல் கலாமின் சகோரர் முத்து மீரான் மரைக்காயர் கமலஹாசனை வரவேற்றார். மவரிடம் கமல்ஹாசன் ஆசி பெற்றார். இதைனையடுத்து முத்து மீரான் மரைக்காயரின் மனைவி மற்றும் உறவினர்கள் கமலுக்கு அறிமுகம் செய்து வைக்கப்படடார்.

இதனிடையே கமலின் அடுத்த கட்ட நிகழ்ச்சியான அப்துல் கலாம் படித்த பள்ளிக்கு செலலும் திட்டத்துக்கு தமிழக அரசு தடைவிதித்தது. இதனால் பள்ளிக்குள் செல்லும் திட்டத்தை கமல் ரத்து செய்தார்.

இந்நிலையில் அப்துல் கலாம் வீட்டிற்கு சென்னு ஆசி பெற்ற கமல்ஹாசன், அவர் படித்த பள்ளி வழியாக சென்றார். அப்போது அந்த பள்ளி முன்பாக காரை நிறுத்திய கமல், அந்த பள்ளியை நோக்கி வணங்கினார்.

தமிழக அரசின் உத்தரவை மதித்து பள்ளிக்குள் செல்வதைத் தவிர்த்த கமலுக்கு அவரது ரசிகர்களும், பொத மக்களும் பாராட்டுத் தெரிவித்தனர்.