டெல்லியில் நாளை ராகுல் காந்தி யாத்திரை… கமல்ஹாசன் பங்கேற்பதாக அறிவிப்பு!!
டெல்லியில் நாளை ராகுல் காந்தியுடன் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்துகொள்வதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
டெல்லியில் நாளை ராகுல் காந்தியுடன் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்துகொள்வதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,600 கிலோ மீட்டர் தூரம் ராகுல்காந்தி பாதயாத்திரை செல்ல திட்டமிட்டு அதன்படி, கடந்த செப்.7 ஆம் தேதி பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் பாதயாத்திரையை தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார். தற்போது அரியானாவில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி நாளை (24-ந்தேதி) டெல்லியில் நடைபயணம் செல்கிறார்.
இதையும் படிங்க: சாப்பாடு நல்லா இருக்கா? மாணவர்களுக்கு உணவு பரிமாறி ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி
இதில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கிறார். அவருடன் கட்சி நிர்வாகிகள், மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்களும் நடைபயணத்தில் கலந்து கொள்கிறார். இந்த நிலையில், டெல்லியில் நாளை ராகுல் காந்தியுடன் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்துகொள்வதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இல்லை; கடலூரில் விவசாயிகள் சாலை மறியல்
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், புதிய இந்தியாவை படைப்போம்....வாருங்கள்...என்னை சக மனிதராக பங்கேற்க அழைத்ததால் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் நாளை பங்கேற்கிறேன். டெல்லி வாழ் தமிழர்கள் திரளாக கலந்துகொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.