கேள்விளை எதிர்கொள்ள வேண்டுமே தவிர, தாக்குதலில் ஈடுபடக் கூடாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தயார் என்று அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை, விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கோவை புறப்பட்டுள்ள கமல் ஹாசன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தயார் என்றார். அரசியல்வாதிகள் தங்கள் மீதான  விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டுமே தவிர, தாக்குதலில் ஈடுபடக் கூடாது என்றார். கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும்.  கேள்விகள் கேட்பார்கள், கேட்டே ஆக வேண்டும். அந்த ஒரு மாண்புதான் நம் இந்திய அரசியலில் இருந்து வந்தது. 

காந்தி, பெரியார், அண்ணா போன்றோர்கள் விமர்சனங்களை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொண்டு, அதற்கான பதில்களையும் அறிவுப்பூர்வமாக சொல்லி நமக்கு வழிகாட்டியவர்கள். அந்த வழியில்தான் நடக்க வேண்டும் என்று நான் நம்பிக் கொண்டிருக்கிறேன் என்று கமல் ஹாசன் கூறினார்.