கொரோனாவால் மரணம் ஏற்பட்டுவிடும் என மக்கள் அச்சப்படக் கூடாது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கொரோனாவுக்குப் பிந்தைய உலகின் புதிய யதார்த்தம் என்ற தலைப்பில் கமல்ஹாசன், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா, மருத்துவர் ஷாலினி மற்றும் டாக்டர் ரமணன் லஷ்மிநாராயண் ஆகியோருடன் காணொளி வாயிலாக கலந்துரையாடினார்.

அப்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த தனது வருத்தங்களையும் அரசின் மீதான விமர்சனங்களையும் அவர்களுடன் பகிர்ந்துகொண்டார். கமல்ஹாசனுடன் உரையாடிய கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா, கொரோனா இரண்டாம் கட்ட அலைகள் ஏற்கனவே தொடங்கி விட்டது என தெரிவித்தார்.

அப்போது கொரோனா விவகாரத்தில் கேரளா சிறப்பாக செயல்பட்டது என கமல் பாராட்ட, அதற்கு  கேரள அமைச்சர் சுகாதாரத்துறை அமைச்சர் தமிழகத்தை பாராட்ட முனைந்தார். அவர் தமிழகமும் மிக சிறப்பாக செயல் பட்டது என்றதும் கமல் கடுப்பானார்.  இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.