சமக 3 தொகுதியை மநீம விடம் கொடுத்தது, மநீம 2 தொகுதியை தேர்தல் கமிஷனிடம் கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர், மேட்டுப்பாளையம் தொகுதிகளுக்கான, கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

மக்கள் நீதி மய்யத்தின் மேட்டுப்பாளையம் வேட்பாளர் ராஜ்குமார், திருவள்ளூர் வேட்பாளர் தணிகைவேல் ஆகியோரின் வேட்பு மனுக்களில் கட்சியின் பெயரை சரியாகக் குறிப்பிடாததால் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் தொகுதி வேட்பாளர் ராஜ்குமார் தவறான படிவத்தில் தகவல்களை நிரப்பியுள்ளார். அதேபோல் திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் தணிகைவேல் கட்சி தொடர்பான விவரங்களை சரியாக குறிப்பிடவில்லை. இதனால் மனுக்கள் நிராகரிக்கப்படுவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மாற்று வேட்பாளர்கள் எவரும் மனு தாக்கல் செய்யாததால் சிக்கல் எழுந்துள்ளது. 135 தொகுதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த மக்கள் நீதி மய்யம் 133 இடங்களில் போட்டியிட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. தேர்தலுக்கு முன்பே மநீம இரு தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளது.