பாதியிலேயே நிறுத்தப்பட்ட கமல் நிகழ்ச்சி... தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி..!

கோவை சிங்காநல்லூரில் கமல்ஹாசன் பங்கேற்ற கூட்டத்தை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முறையாக அனுமதி பெறாமல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

kamal haasan interaction stop...election flying squad action

கோவை சிங்காநல்லூரில் கமல்ஹாசன் பங்கேற்ற கூட்டத்தை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முறையாக அனுமதி பெறாமல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. kamal haasan interaction stop...election flying squad action

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைதேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறுகிறது. திமுக, அதிமுக, அமமுக கூட்டணி சார்பாக வேட்பாளர்கள் அறிவித்துவிட்டனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார். மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் கட்சியின் தேர்தல் அறிக்கை கோவையில் இன்று வெளியிடப்படும் என கமல் தெரிவித்திருந்தார். மேலும் மக்களவை தொகுதியில் தாம் போட்டியிடப்போகும் தொகுதியையும் இன்று அறிவிக்க உள்ளார்.

 kamal haasan interaction stop...election flying squad action

இந்நிலையில் கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே தனியார் பள்ளியில் மருத்துவர்களுடன் கமல் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது இங்கு விரைந்த தேர்தல் பறக்கும் படையினர் அந்த கூட்டத்தை தடுத்து நிறுத்தினர். இதனால் கூட்டம் பாதியில் தடை பெற்றது. முறையாக அனுமதி பெறாமல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios