'அரசியலில் எட்டுமாதக் குழந்தையாக இருக்கும் கமல்ஹாசனை கருவிலேயே கலைத்திருக்கவேண்டும்’ என்று கொடூரமாக ஸ்டேட்மெண்ட் விட்டு கமல் ஆதரவாளர்களைக் கொந்தளிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இன்று நாகர்கோவிலில் பத்திரிகையாளர்கள் மத்தியில் கமலை ஏகத்துக்கும் ஏசிய அவர்,

’கமல்ஹாசன் கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணிக் குழந்தை. அதை வளரவிடுவது தமிழக மக்களுக்கே ஆபத்தாக போய் முடியும். வெளிநாட்டு தீய சக்திகளுடன் கமல்ஹாசன் கைகோர்த்துக்கொண்டுள்ளதை போன்ற சந்தேகம் ஏற்படுகிறது. 

ஏதோ தமிழகத்தை காக்க வந்த ரட்சகர் போல கமல்ஹாசன் வேடமிடுகிறார். ஆனால், அது தேர்தல் களத்தில் ஒத்துவராது. அதிமுகவிற்கு எதிரி திமுக மட்டும்தான். கமல்ஹாசன் ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாது. எம்.ஜி.ஆர். மக்களோடு இருந்து மாளிகையை கண்டவர், ஆனால் கமல் மாளிகையில் இருந்து மக்களை பார்ப்பவர்’என்று வாய்க்கு வந்தபடியெல்லாம் கமலை விளாசித்தள்ளினார். சமீபகாலமாக அதிமுக அமைச்சர்களின் பேச்சில் கமல் குறித்த விமர்சங்கள் சற்று எல்லை மீறித்தான் போய்க்கொண்டிருக்கின்றன.