Asianet News TamilAsianet News Tamil

ஐ.எஸ்.தீவிரவாதிட்ட பணம் வாங்குற கமலை உதை உதைன்னு உதைக்கணும்: ராகத்தை மாற்றாத ராஜேந்திர பாலாஜி

நிஜமோ அல்லது நாடகமோ, கமல்ஹாசனை விரட்டி விரட்டி வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. ’கொழுப்பெடுத்த கமலின் நாக்கை அறுக்கணும்.’ என்று அவர் விமர்சன கத்தியை தீட்டியபோது அதிர்ந்த தமிழகம் இன்னமும் சகஜ நிலைக்கு திரும்பவில்லை.

kamal got money from isis says rajendra balaji
Author
Chennai, First Published May 19, 2019, 12:45 PM IST

ஐ.எஸ்.தீவிரவாதிட்ட பணம் வாங்குற கமலை உதை உதைன்னு உதைக்கணும்: ராகத்தை மாற்றாத ராஜேந்திர பாலாஜி

நிஜமோ அல்லது நாடகமோ, கமல்ஹாசனை விரட்டி விரட்டி வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. ’கொழுப்பெடுத்த கமலின் நாக்கை அறுக்கணும்.’ என்று அவர் விமர்சன கத்தியை தீட்டியபோது அதிர்ந்த தமிழகம் இன்னமும் சகஜ நிலைக்கு திரும்பவில்லை. ஆனால் அதற்குள் அடுத்தடுத்து விமர்சன குண்டுகளை வீசியபடியே உள்ளா மனிதர். 

kamal got money from isis says rajendra balaji

அந்த வகையில் இப்போது “முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர், மற்ற அமைச்சர்களெல்லாம்  அமைதியாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் நான் கமல்ஹாசனை விடமாட்டேன். யாராவது ஒருவர் அந்த பூனைக்கு மணியை கட்டத்தான் வேண்டும். அதை நான் கட்டுகிறேன். இப்படி செய்யச்சொல்லி எனக்கு டெல்லியில் இருந்து உத்தரவு வந்ததாக சொல்வதெல்லாம் கமல் கோஷ்டி கிளப்பிவிடும் வதந்தி. 

kamal got money from isis says rajendra balaji

சில விஷயங்களை ஓப்பனா சொல்லலாம். ஆனா மந்திரி இப்படி சொல்லிட்டாருன்னு பேசுவீக! அதனாலதான் வாயை பொத்திட்டு இருக்கேன். ஆனாலும் சொல்றேன்...ஐ.எஸ். தீவிரவாதிகளிடமிருது பணத்தை வாங்கிட்டுதான் இப்படியெல்லா பேசுறார் கமல்ஹாசன். தீவிரவாதத்துக்கு மதமே கிடையாது. ஆனால் இவரு இந்துக்களை இப்படி மோசமா பேசுறார்.

kamal got money from isis says rajendra balaji
 
இந்த கமலஹாசனை விரட்டி விரட்டி உதை உதைன்னு உதைக்கணும். மீண்டும் சொல்றேன், அவர நான் விடவே போறதில்லை. சீண்டி பேசினால் இப்படித்தான் அதிரடியா விமர்சனங்கள் வந்து விழும். அதுக்குப் பயந்து கமல்ஹாசனை அமைதியா இருக்க சொல்லுங்க. எனக்கொன்னும் அவரைப் பார்த்து பயமில்லை, அவருக்குதான் என்னைப் பார்த்து பயம்.” என்று செம்ம ராகம் போட்டிருக்கிறார் இந்த ரா.பா.

Follow Us:
Download App:
  • android
  • ios