இந்நிலையில், இதற்காக இன்று காலை கோயமுத்தூர் விமான நிலையம் சென்று இறங்கிய கமலிடம் பேட்டி கேட்டுள்ளனர்.  இந்நிலையில் பேட்டி கொடுக்க வந்து நின்ற இடத்தில்  மைக்குகள் சாய்ந்ததால் துவக்கத்திலேயே லேசாய்  டென்ஷனான கமல், கடுப்போடுதான் கேள்விகளை எதிர்கொண்டாராம். “கொடநாடு விவகாரத்தில் முதல்வர் பெயரும் சேர்த்துப் பேசப்படுகிறது. இதில் உங்களது நிலைப்பாடு என்ன?” என்று செய்தியாளர்கள் கேட்டிருக்கின்றனர். 

அதற்கு “மர்ம தொடரின் அடுத்த அத்தியாயம் இது! கடந்த இரண்டரை ஆண்டுகளாக இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்!” என்று சொல்லியிருக்கிறார். 

இந்நிலையில் கொடநாட்டில் கொலை, கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது 2017 ஏப்ரலில்தான். இந்த நிலையில் அதற்குள் எப்படி ரெண்டரை ஆண்டுகளாகும்? தான் வெளியிடும் தகவல்களில் கடுமையான உண்மைத்தன்மையை மட்டுமே வைத்து பேசும் கமல், அரசியல் தலைவரான பிறகு தடுமாற துவங்கிவிட்டார், இதனாலேயே உளறல் எழுந்துவிட்டது! என்று பேச்சு விமர்சனம் எழுந்துவிட்டது. 

ஆனால் இதற்கு பதில் சொல்லும் கமல்ஹாசனின் தரப்போ “அவர் தெளிவாகத்தான் பேசியிருக்கிறார். ஜெயலலிதா அப்பல்லோவில் சேர்க்கப்பட்டதில் துவங்கி எல்லாமே மர்மங்கள்தான் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் இந்த கொடநாடு விவகாரமானது, அடுத்த அத்தியாயம். அதைத்தான் அவர் குறிப்பிட்டுள்ளார்.” என்று விளக்கம் கொடுத்தார்களாம். 
கமலா கொக்கா?