துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் நேற்று இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஆளும்கட்சியை தவிர மற்ற அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் இந்த பட்ஜெட் அதிருப்தி அளிப்பதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில் இந்த பட்ஜெட் குறித்து நடிகரும் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் தலைவருமான கமலஹாசன் பன்னீர் செல்வத்தின் பட்ஜெட்டை கலாய்த்து தன்னுடைய கருத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்... 

2018-19 ஆண்டின் தமிழக பட்ஜெட் எம் விமர்சனத்தை சொல்ல சில சிற்றாய்வுகள் செய்ய வேண்டி இருந்ததால் தாமதம் என்று கூறி தன்னுடைய கருத்தை வெளிபடுத்தியுள்ளார். 

நிதிநிலை அறிக்கை:

முதலில் தொடங்கும் குரலை தவிர இந்த அறிக்கையில் எந்த மாற்றம் இல்லை என்றும் சென்ற ஆண்டின் நகல் என தெரிவித்துள்ளார், மேலும் இதில் விவசாயிகள், நெசவாளர், மீனவர்களுக்கு என எந்த சிறப்பான திட்டமும் இல்லை என்றும் வருங்காலத்தில் இதைவிட சிறந்த பிரதிநிதி தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் வேலை தேடுபவர்கள் ஒரு கோடிக்கும் மேல் உள்ள நிலையில் இந்த நிதி நிலை அறிக்கைப் படி கடந்த 7 ஆண்டுகளில் வெறும் 4 லட்சம் இளைஞர்கள் மட்டுமே திறன் பெற்றனர் என்றும் அதிலும் 1 லட்சம் இளைஞர்களே பணியமர்த்தப்பாட்டுள்ளனர். இதில் எங்கே இளைங்கர்களுக்கு வேலை வாய்ப்பு என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்திக்கடவு - அவினாசி திட்டம்

மேற்கு தமிழகத்தினர் 'அத்திக்கடவு அவினாசி திட்டம் தங்களுக்கு நீர் வழங்கும் என பல ஆண்டுகளாக வழி மேல் விழி வைத்து கார்திருக்கின்றனர். அனால் இம்முறை அறிவித்தபடி 250 கோடியும் சென்ற வருடம் அறிவித்த அதே தொகையைப் போல் கானல் நீராய் ஆகிவிடுமோ என்று பல்வேறு கேள்விகளை ஆளும் கட்சியினரிடம் எழுப்பியுள்ளார்.

மேலும் பள்ளிக் கல்வி, தொழில் வளர்ச்சி, நகர மேம்பாடு, இந்து சமய அறநிலையத் துறை, வாக்ஃப் போர்டு, கடன் என இந்த பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள துறைகளில் தன்னுக்கு எழும் சந்தேகத்தை அலசி ஆராந்து கேட்டுள்ளார் கமல்.