*    தங்களை மாவோயிஸ்ட்கள் சுட்டதால் திருப்பிச் சுட்டோம்!ன்னு போலீஸ் சொல்லுது. ஆனால் போலீஸ் தரப்பில் சிறு காயங்கள் கூட இல்லை. மாவோ தலைவர் மாணிக்கவாசகத்தை பிடிச்சு வைத்து, சித்ரவதை பண்ணி பல விஷயங்களை கறந்துட்டு, அப்புறம் நிதானமா போட்டுத் தள்ளியிருக்காங்க. 
-    கேரள மனித உரிமை  போராளிகள் 

*    இனியும் அ.ம.மு.க.வில் இருந்து ஒரு பிரயோசனமும் இல்லை எனும் எண்ணத்தில் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு வர பலர் திட்டமிட்டுள்ளனர். இருந்தாலும் அவர்களை சாதி பாசம் தடுப்பணை போட்டிருந்தது. ஆனால் அதையும் திவாகரன் உடைத்தெறிந்து ‘அக்கா சசிகலா வெளியே இருந்தால் இந்த முடிவைத்தான் எடுப்பார்’ என்று சொல்லி உடைக்கிறார். 
-    பத்திரிக்கை செய்தி. 

*    நடந்து முடிந்த  இரு தொகுதி இடைத்தேர்தல் என்பது அ.தி.மு.க.வுக்கு வாழ்வா, சாவா போராட்டம். இதில் வெல்லவில்லை என்றால் மக்கள் மன்றத்தில் பெரும் அவமரியாதைக்குள்ளாகவும், ஆட்சியை இழக்கவும் கூட வேண்டியிருக்கும். எனவே கூடுதல் பணம் கொடுத்து ஜெயித்துள்ளனர். தி.மு.க. கூட்டணியின்  இந்த தோல்விக்கும், உதயநிதிக்கும் எந்த சம்பந்தமுமில்லை. 
-    தங்கத் தமிழ் செல்வன் (தி.மு.க. கொ.ப.செ.)

*    ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பாக அம்மா ஜெயலலிதாவுடன் போட்ட ஒப்பந்தத்தின் படி நான் இன்னும் அ.தி.மு.க.வுடன் தான் இருக்கிறேன். பா.ஜ.க.வுக்கும் எனக்கும் தொடர்பில்லை. எதிர்காலத்தில் தி.மு.க. அழைத்தால், அந்நேரத்தில் கட்சியினரிடம் பேசி, புதுத் தோழமையா! பழைய தோழமையா! என்று முடிவெடுப்பேன். 
-    தனியரசு (காங்கயம் எம்.எல்.ஏ.)

*    பிரபல ஆண்டிவைரஸ் சாஃப்ட்வேர் கம்பெனியான காஸ்பெர்ஸ்கி, கூடங்குளம் அணுமின் நிலைய கண்ட்ரோல் சிஸ்டத்தில் ஒரு ஸ்பை வைரஸ் ஊடுருவியிருந்ததைக் கண்டுபிடித்தது. அதன் பெயர் ‘டி டிராக்ரேட்’ என்கிறார்கள். 
-    சசிதரூர் (காங்கிரஸ் எம்.பி.)

*    சீக்கிரமாகவே நல்ல செய்திகளை நாங்கள் சொல்வோம். சேலத்தில் நாங்கள் போட இருக்கிற மெகா கூட்டமானது இணைப்புக் கூட்டமா அல்லது வேறு கூட்டமான்னு பொறுமையா கவனியுங்க. ஆனால் ஒண்ணு, இனி தினகரனுக்கு சின்னம்மா சசிகலா பத்து பைசா கூட தரமாட்டார். இனி அ.ம.மு.க. தேறுவது ரொம்ப கஷ்டம். 
-    புகழேந்தி 

*    தன் உடல்நிலை குறித்தெல்லாம் ப.சிதம்பரம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லையாம். மாறாக அவர் சந்தோஷத்தில் இருக்கிறார். காரணம்? கர்நாடக காங்கிரஸ் வி.ஐ.பி. சிவக்குமாருக்கு ஜாமீன் கிடைத்தது போலவே, தனக்கும் எப்படியும் இந்த மாதம் கிடைத்துவிடும், வெளியில் வந்துவிடலாம்! எனும் நம்பிக்கையில், தெம்பாக இருக்கிறார். 
-    பத்திரிக்கை செய்தி.

*    சென்னை பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் அட்கோ நகர் பகுதியில் சுமார் ரெண்டு ஏக்கர் பரப்பளவில் பங்களா கட்டும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. இங்கு அனைத்துப் பணிகளும் முடிந்து தற்போது சிமெண்ட் பூச்சு வேலைகள் நடந்து வருகிறது. பெயிண்ட் அடித்ததும் வரும் தை மாதம் புதிய பங்களாவில் குடியேற இருக்கிறார் விஜயகாந்த். 
-    தே.மு.தி.க. பரபரப்பு

*    அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கும் வெளிநாடு சுற்றுப்பயணம் செல்லும் ஆசை வந்துவிட்டது. இதற்காக முதல்வரிடம் அனுமதி கேட்டு இரண்டு முறை கடிதம் எழுதிவிட்டாராம். ஆனால் பதில் இல்லை. காரணம்? சசிகலாவின் ஆதரவாளர்கள்! என்று இ.பி.எஸ். சந்தேகிக்கும் அமைச்சர்களில் ஓ.எஸ்.எம்.மும் ஒருவர் என்பதால்தானாம். சசி சிறையிலிருந்து வெளியே வந்ததும் அவர் கையில் மொத்த கட்சியும் சென்று விடும்! என்று நம்பும்  வி.ஐ.பி.க்களில் அவரும் ஒருவராக இருப்பதே காரணமாம். 

*    கமல்ஹாசனை பொறுத்தவரையில் நாம் தமிழர் கட்சியின் சீமானை விடவும் குறைவான வாக்கு வங்கியே வைத்துள்ளார். அரசியல் கன்சல்டன்ஸி நடத்தி வரும் பிரஷாந்த் கிஷோர் ஒரு வேளை கமலுக்காக வேலை செய்தால், கமலால் சீமானை வேண்டுமானால் முந்த முடியுமே தவிர முதல் இடத்துக்கோ, ரெண்டாவது இடத்துக்கோ வரவே முடியாது. 
-    ரவீந்திரன் துரைசாமி (அரசியல் விமர்சகர்)