மக்கள் நீதி மய்யம் கட்சி மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. இக்கட்சியின் 20 பேர் அடங்கிய முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே சென்னையில் அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எஞ்சிய வேட்பாளர்களின் பெயர்களை கமல்ஹாசன் அறிவித்தார். 
இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்:
காஞ்சிபுரம்: தங்கராஜ்
தி.மலை: ஆர்.அருள்
ஆரணி:ஷாஜி
கள்ளக்குறிச்சி: கணேஷ்
நாமக்கல்: தங்கவேல்
ஈரோடு: சரவணக்குமார்
ராமநாதபுரம்:விஜயபாஸ்கர்
கரூர்: ஹரிஹரன்
பெரம்பலூர்: அருள்பிரகாசம்
தஞ்சாவூர்: சம்பத் ராமதாஸ்
சிவகங்கை:சினேகன்
மதுரை: அழகர்
தென் சென்னை: ரங்கராஜன்
கடலூர்: வி.அண்ணாமலை
விருதுநகர்: முனியசாமி
தென்காசி: முனிஸ்வரன்
திருப்பூர்: சந்திரகுமார்
பொள்ளாச்சி: மூகாம்பிகை
கோவை:மகேந்திரன்


இதேபோல தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற இள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை கமலஹாசன் அறிவித்தார்.
இதன்படி, பூந்தமல்லி: ஜெகதீஷ்
பெரம்பூர்: வி.பிரியதர்ஷினி
திருப்போரூர்: கருணாகரன்
சோளிங்கர்: மலைராஜன்
குடியாத்தம்: வெங்கடேசன்
ஆம்பூர்: நந்தகோபால்
ஒசூர்: ஜெயபால்
பாப்பிரெட்டிபட்டி: நல்லதம்பி
அரூர்: குப்புசாமி
நிலக்கோட்டை: சின்னதுரை
திருவாரூர்: அருண் சிதம்பரம்
தஞ்சாவூர்:துரையரசன்
ஆண்டிப்பட்டி: தங்கவேல்
பெரியகுளம்: பிரபு
சாத்தூர்: சுந்தர்ராஜ்
பரமக்குடி: உக்கிரபாண்டியன்
விளாத்திகுளம்: நடராஜன்


 நடிகர் கமல்ஹாசன் தென் சென்னை அல்லது ராமநாதபுரம் தொகுதிகளில் போட்டியிடுவார் என தொடர்ந்து செய்திகள் வெளியாகின. கோவையில் வெளியாகும் வேட்பாளர் பட்டியலில் கமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கமல் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துவிட்டார். இதேபோல அக்கட்சியைச் சேர்ந்த நடிகை ஸ்ரீபிரியாவின் பெயரும் பட்டியலில் இடம்பெறவில்லை.