தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை கமல்ஹாசனாலோ, ரஜினிகாந்த்தாலோ நிரப்ப முடியாது என நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.

நடிகர் கமலஹாசன் சரிகாவை விவாகரத்து செய்த பிறகு, நடிகை கவுதமியுடன் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தார். ஆனால் அவர்களுக்கும் ஏற்பட்ட  கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு பிரிந்து விட்டனர்.

இதையடுத்து இருவருமே தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி தொடங்கியுள்ளார். தற்போது அவர் முழு நேர அரசியல்வாதியாக மாறியுள்ளார்.

இதே போன்று நடிகர் ரஜினிகாந்த்தும் புதிய கட்சியை தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். அதற்கான பணிகளை தற்போது செய்து வருகிறார்.

இந்நிலையில் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நடிகை கவுதமி தனது மகளுடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். அந்த வெற்றிடத்தை ஒரே நாளில் யாரும் நிரப்ப முடியாது என கூறினார்.

அதே நேரத்தில் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை கமல்ஹாசனாலோ, ரஜினிகாந்த்தோலோ நிரப்ப முடியாது என்று தெரிவித்த கவுதமி, அதற்கான சாத்தியமே இல்லை என்றும் அதிரடியாக தெரிவித்தார்.