திரைத்துறையில் நெருங்கிய நண்பர்களாக இருக்கும் கமல் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தற்போது அரசியலிலும் கால் பதித்துள்ளனர். 

ரஜினி தன்னுடைய அரசியலை ஆன்மீக அரசியல் என்று கூறுகிறார். கமல் பகுத்தறிவு மற்றும் திராவிட அரசியல் என்று கூறுகிறார். சினிமா வாழ்கையில் மட்டும் அல்ல இவர்கள் இருவரும் அரசியலிலும் நேர் எதிர் பாதையில் தான் தங்களுடைய பயணத்தை துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஆங்கில பத்திரிக்கை ஒன்றின் கேள்விக்கு பதில் அளித்துள்ள நடிகர் கமலஹாசன், அரசியல் ரீதியாக, வரும் காலங்களில் கண்டிப்பாக தனக்கும் ரஜினிக்கும் நிச்சயம் பிரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். 

இதே கருத்தை கடந்த சில நாட்களுக்கு முன் ரஜினிகாந்தும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரின் அணுகுமுறை வித்தியாசமாக இருந்தாலும் இவர்கள் அரசியலில் கால் பதிப்பது மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்கிற நோக்கத்தில் தான் என இருவருமே தங்களுடைய கருத்தை தெரிவித்துள்ளனர்.