அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளராகவும், துணைமுதல்வராகவும் இருக்கிற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தினந்தோறும் கட்சியின் மாவட்டச் செயலர்களுக்கு போன் போட்டு பேசுகிறார். அப்போது அந்தந்தப் பகுதிகளின், சட்டசபை தொகுதிகளின் நிலவரம் பற்றி விசாரிக்கிறார். அப்படி பேசுகையில், 'மூன்றாவது முறையாக ஜெயலலிதா ஆட்சியை அமைக்க வேண்டும். அதற்கு நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் கோஷ்டிப்பூசலை மறந்து, ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். களத்தில் நாம் சேர்ந்து நின்றால் தி.மு.க.,வை எளிதாக தோற்கடித்து விடலாம்’’என எழுச்சியூட்டி வருகிறார். 

அதேபோல ஒவ்வொரு தொகுதியிலும் அதிமுகவில் செல்வாக்குள்ளவர்கள் யார்? திமுகவில் சீட் கேட்பவர்களின் பலம், பலவீனம் என்ன என்பதையும் விசாரித்து வருகிறாராம். திண்டுக்கல் சீனிவாசன், அமைச்சர் பாஸ்கர் ஆகியோரின் செயல்பாடுகள் சரியில்லை. அவர்களது மகன்கள் அங்கே கோலோச்சி கோடி கோடியாக சம்பாதித்து தொகுதியில் பெயரைக் கெடுத்து விட்டார்கள். நிலைமை இப்படி இருக்க, இருவரும் தங்களது மகன்களுக்கும் சீட்டு கேட்டு தலைமையை நச்சரிக்க ஆரம்பித்துள்ளனர். 

இவர்களுக்கே சீட்டு கிடைக்குமா என்பது? கேள்விக்குறி. இதில் அவர்களது வாரிசுகளுக்கும் கேட்பது தலைமையை அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. தென்மாவட்டங்களை பொறுத்தவரை இந்த இரு அமைச்சர்களுக்கு இந்த முறை கல்தா நிச்சயம் என்கிறார்கள் அதிமுக தலைமையில் உள்ள நிர்வாகிகள். இந்த முறை தயவு தாட்சன்யம் பார்க்காமல் நின்றால் வெற்றிபெறக் கூடியவர்களுக்கே சீட் கொடுக்க அதிமுக தலைமை முடிவெடுத்துள்ளது. அமைச்சர்கள் என்கிற முறையில் எல்லாம் சீட் வழங்க முடியாது. இது அதிமுகவுக்கு வாழ்வா? சாவா? போராட்டம் என்பதால் ஓ.பி.எஸ்- இ.பிஎஸ் இருவரும் வேட்பாளர்கள் விஷயத்தில் கடுமை காட்ட முடிவெடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.