புதியதாக பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு திமுக பொறுப்பாளர்களை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- கழக நிர்வாக வசதிக்காகவும்- கழகப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும், விழுப்புரம் தெற்கு (கள்ளக்குறிச்சி) மாவட்டத்தில் அடங்கியுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள் பின்வருமாறு மாற்றி அமைக்கப்படுகிறது.

கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம்

* சங்கராபுரம்

* உளுந்தூர்பேட்டை

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம்

* ரிஷிவந்தியம்

*கள்ளக்குறிச்சி (தனி)  இவ்வாறு பிரிக்கப்பட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி வடக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு ஆகிய மாவட்டக் கழகங்கள் செயல்படும்.

மாவட்டப் பொறுப்பாளர் - பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நியமனம்

மேற்குறிப்பிட்டவாறு புதியதாக அமையப் பெற்ற மாவட்டங்களுக்குப் பின்வருமாறு மாவட்டப் பொறுப்பாளர் - பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம்

பொறுப்பாளர் - தா.உதயசூரியன், எம்எல்ஏ

பொறுப்புக்குழு உறுப்பினர்கள்

* ரா.விஜயகுமார், கணையார் & அஞ்சல்

* ஏ.ஜெ.மணிக்கண்ணு, நகர் கிராமம்

* வி.எஸ்.ஆசிர்வாதம், எறையூர் & அஞ்சல்

* க.நடுராஜன், எடுத்தவாய்நத்தம் & அஞ்சல்

* இ.கமுருதீன், சங்கராபுரம் & அஞ்சல்

* ர.ஜெயந்தி, ஆரம்பூண்டி & அஞ்சல்

* மா.நாகராஜன், கொசப்பாடி காலனி

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம்

பொறுப்பாளர் - வசந்தம் கார்த்திகேயன், எம்எல்ஏ

பொறுப்புக்குழு உறுப்பினர்கள்

*  கி.இராமூர்த்தி, நீலங்களம் & அஞ்சல்

*  கோ.அமிர்தவள்ளி, பேரால்

*  இரா.மூக்கப்பன், பெருவங்கூர் & அஞ்சல்

* பெ.காமராஜ், கள்ளக்குறிச்சி

* மு.லியாகத் அலி, கள்ளக்குறிச்சி

*  ம.கென்னடி, கள்ளக்குறிச்சி

* இரா.சண்முகம், கள்ளக்குறிச்சி

*  மு.இராஜேந்திரன், வடமாமாந்தூர் 

திமுக மகளிர் அணி துணைச் செயலாளர் நியமனம்

திமுக சட்டதிட்ட விதி 31-பிரிவு 3-ன்படி, திமுக மகளிர் அணி துணைச் செயலாளராக ஆ.அங்கயற்கண்ணி, தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார். ஏற்கெனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் இவர் இணைந்து பணியாற்றுவார் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.