கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பிரபு தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிவருகிறார்.

தினகரனுக்கு ஆதரவாக ஏற்கனவே 18 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

அந்த வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் ஆட்சி கவிழ்க்கப்படும் என தினகரன் தெரிவித்துவருகிறார். ஏற்கனவே 18 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தினகரனுக்கு உள்ளது. இதற்கிடையே தினகரனும் ஆர்.கே.நகரில் அபார வெற்றி ஆட்சியாளர்களை மிரட்டினார். இந்நிலையில், பழனிசாமிக்கு ஆதரவாக இருந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு தற்போது தினகரனை சந்தித்துள்ளார்.

பிரபு தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில் முதல்வர் பழனிசாமியை தலைமையிலான ஆட்சியை கலைப்பது தினகரனுக்கு எளிதாகிவிடும்.