மீண்டும் நாற்காலியில் அமர்ந்தார் கலைஞர்...!

திமுக தலைவர் காருணாநிதி காவேரி மருத்துவமனையில் கடந்த 27 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

இரவு 1.30 மணி அளவில் திடீரென கலைஞர் உடல் நலனில் சற்று பின்னடைவு ஏற்பட்டதால், அன்று இரவே அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இன்றுடன் 5 ஆவது நாளாக சிகிச்சை பெற்று வரும் கலைஞரின் உடலில் நிலையில் முனேற்றம் ஏற்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்

காவேரி மருத்துவமனை முன்பு கடந்த 5 நாட்களாகவே தொண்டர்கள் கூடி, கலைஞர் நலம் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்து வந்தனர்.

இந்நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலைஞர் உடல் நலம் குறித்து விசாரிக்க நேரில் வந்தனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்ட பின்பு தான் தொண்டர்கள் கலைஞரின் உடல் நலம் குறித்து நம்ப தொடங்கி, காவேரி மருத்துவமனை எதிரில் இருந்து பெரும்பாலோனோர் வீடு திரும்பினர்.

இந்நிலையில், அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதை உணார்ந்த மருத்துவர்கள், அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, நேற்று இரவு சிறிது நேரம் நாற்காலியில் அமர வைத்து  பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது

இது குறித்து மருத்துவ வட்டார தகவல் தெரிவிக்கும் போது, கலைஞரின் உடல் நிலையில் நல்ல முனேற்றம் ஏற்பட்டு உள்ளதாகவும், நேற்று இரவு சிறிது நேரம் நாற்காலியில் அமர வைத்து பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளதாகவும், மேலும் இதுவரை கருணாநிதி செயற்கை சுவாசம் மூலம் சுவாசிக்கிறார் என்றும், தேவைப்பட்டால் மட்டுமே ஆக்சிஜன் மாஸ்க் சிறிது நேரம் பொருத்தப்படுகிறது என்றும் தெரிவிக்கின்றனர்.

மேலும் தோற்று நோய் சிகிச்சை நிபுணர்கள் லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்டு, மேற்பார்வை செய்யப்படுகிறது. மேலும் கலைஞருக்கு தொற்றுநோய் பரவாமல் எப்படி பாதுகாத்திட வேண்டும் என பல ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.