திமுக பொருளாளராக பொறுப்பேற்று உள்ள துரைமுருகன் கருணாநிதி உடனான தன்னுடைய நட்பு பற்றி பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அழைத்துள்ளார் அதில் நெறியாளர் கேட்கும் பல்வேறு கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதில் அளித்துள்ளார் துரைமுருகன்.

அப்போது, முதல் முதலில் கலைஞருக்கும் உங்களுக்கும் எப்படி பழக்கம் என்ற கேள்விக்கு...

என்னை முதன் முதலில், எம்ஜிஆர் தான் கலைஞருக்கு அறிமுகம் செய்து வைத்தார். நான் பச்சை பாஸ் கல்லூரியில், ஒரு நிகழ்ச்சியில் வரவேற்புரை நிகழ்த்தினேன். அப்போது எம்ஜிஆர் அந்த நிகழ்ச்சியில்  பங்கேற்றார்.

அதன் பின், வேலூரில் நான் இருந்த போது, அங்கு நிதி திரட்ட கலைஞர் மற்றும் எம்ஜிஆர் பங்கேற்ற கூட்டம் நடந்தது. நான் அங்கு சென்ற போது, எம்ஜிஆர் என்னிடம் நன்றாக பேசிக்கொண்டு இருந்தார். இதை பார்த்த கலைஞர்....யாரு இந்த தம்பி..? என கேட்க.. 

இவர் "துரை" என என்னை முதன் முதலில் அறிமுகம் செய்து வைத்தார். பின்பு அந்த நட்பு ..இன்று  பொருளாளர் வரை கொண்டு வந்து நிறுத்தி உள்ளது என அவர் குறிப்பிட்டு உள்ளார்.

அடுத்ததாக கலைஞர் எப்போதாவது உங்களை திட்டி உள்ளாரா.. என்ற கேள்விக்கு...அவர் என்னை எப்போதும் திட்டியது கிடையாது.. சொல்லப்போனால் நான் தான் அடிக்கடி அவரிடம் கோபித்துக்கொண்டு சென்று விடுவேன்.... போறான் பாரு உர்ருன்னு..அவன வர சொல்லு என கலைஞர் மற்றவரிடம் சொல்லி மீண்டும்  அழைப்பார் என தெரிவித்து உள்ளார்.

துரை போலாமா..?

மேலும் தன்னை கலைஞர் எப்போதும் வாடா போடா என்று அழைத்தது கிடையாது என்றும்..எப்போதும் துரை போலாமா..? என்று கேட்பார் என்றும் தெரிவித்து உள்ளார்.

அதே போன்று, காலை ஆறு மணிக்கு வா என்று கலைஞர் என்னிடம் சொல்லி இருந்தால், நான் ஆறே முக்கால் மணிக்கு தான் செல்வேன்...அந்த சமயத்தில் கலைஞர் என்னை பார்த்து சொல்வார்..." வாப்பா  அண்ணா வராரு பாருங்க....ஏண்பா உன்ன எத்தனை மணிக்கு வர சொன்னேன் இப்ப வர..சோம்பேறி...... உனக்காக  காலையிலிருந்து காத்துட்டு இருக்கணுமா....? என கொஞ்சம் கோபமாக பேசுவார் என தெரிவித்து உள்ளார் துரை முருகன்.