திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்தவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அமுகிரி. ஆனால் ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். இதையடுத்து கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் தேதி அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் தான் கடந்த வாரம் திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்தார். அவரது உடல் அண்ணா நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று மு.க.அழகிரி தனது குடும்பத்தினருடன் வந்து கருணாநிதியின் சமாதிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அதிமுகவில் ஓபிஎஸ் ஜெயலலிதா சமாதி முன்பு தியானம் செய்து அக்கட்சிக்கு எதிராக தர்மயுத்தத்தைத் தொடங்கியது போல, மு.க.அழகிரியும் திமுகவுக்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கியுள்ளார்.

அதனது தந்தைக்கு அஞ்சலி செலுத்திய பின் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த  தொலைக்காட்சி லோகோக்களைக் பார்த்தார். கன் டிவி மற்றும் கலைஞர் டிவி லோகோக்களைப் பார்த்த  அவர் இந்த இரண்டு தொலைக்காட்சிகளும் எனது பேட்டியை ஒளிபரப்ப மாட்டார்கள் என நேரடியாக அதே நேரத்தில் நகைச்சுவையாக குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர்,  தான் இப்போது திமுகவில் இல்லாததால் நாளை நடைபெறயுள்ள செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், ஆனால் போகப் போகத் தான் என் திட்டம் என்னவென்று தெரியும் என அழகிரி அதிரடி காட்டினார்.