கடந்த மக்களவை தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றதால் நாம் தமிழர் கட்சி உள்ளாட்சி தேர்தலில் குறிப்பிடும் அளவிற்கு வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரே ஒரு கவுன்சிலர் சீட்டை மட்டுமே பிடித்தது. இதனால் அகட்சியினர் துவண்டு போயுள்ளனர். இந்நிலையில் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவதை போல ஒரு சம்பவத்தை செய்துள்ளனர் நித்யானந்தாவின் சீடர்கள்.

இந்த படுதோல்வியை நையாண்டி சேயும் விதமாக நித்யானாந்தாவின் கைலாஷ் நாட்டின் ட்விட்டர் பக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

 

அதில், ‘’மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து வார்டுகளிலும் அமோக வெற்றி பெற்ற தமிழ் தேசிய தலைவர் சீமான் அவர்களை கைலாஷ் மக்கள் சார்பாக மனமார வாழ்த்துகிறோம்’’ எனத் தெரிவித்துள்ளது. மட்டக்களவுப்பு, கிளிநொச்சி ஆகிய பகுதிகள் இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.