kadambur raju talks about TN politics
தற்போதைய அதிமுக அரசில் ஆதாரபூர்வமாக எந்த துறையிலும் ஊழல் நிருபிக்கப்படவில்லை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். இதன் காரணமாக தமிழக அமைச்சர்களின் கடுப்புகளுக்கு அவர் ஆளானார்.
இது தொடர்பாக கமலுக்கும், அமைச்சர்களுக்கும் இடையேயான வார்த்தை மோதல்கள் அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது. ஊழல் குற்றச்சாட்டு குறித்து பொத்தாம் பொதுவாக கூறக் கூடாது என்று அமைச்சர்களும், ஊழல் குறித்த விவரங்களை அத்துறைக்கு அனுப்புமாறு நடிகர் கமலும் கூறியிருந்தனர்.

இதைதொடர்ந்து நடிகர் கமல்ஹாசனுக்கு பல்வேறு ஆதரவுகள் எழுந்துள்ள நிலையில், அவரின் ரசிகர்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தற்போதைய அதிமுக அரசில் ஆதாரபூர்வமாக எந்த துறையிலும் ஊழல் நிருபிக்கப்படவில்லை என தெரிவித்தார்.
மேலும், நீட் தேர்வு, விவசாயிகள் பிரச்னை,ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட தமிழகத்திற்கு எதிரான திட்டங்களுக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக கடம்பூர் ராஜூ குறிப்பிட்டார்.
