திராவிடர் கழக சொத்துக்களை மீட்டது வைகோதான் கி.வீரமணி ஒப்புதல்
திராவிட கழக தலைவர் கி.வீரமணி, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்திருந்தார். அதில் செய்தியாளர் எழுப்பிய
கேள்விக்கு வைகோ, தங்களது அமைப்பின் சொத்துக்களை காப்பாற்றி கொடுத்தது உண்மைதான் என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.

வாஜ்பாயின் உதவியை நாடி பெரியாரின் சொத்துக்களை காப்பாற்றிக் கொடுத்தேன் என்றும் இதனை வீரமணி மறந்துவிடக் கூடாது
என்றும் வைகோ ஒரு பேட்டியில் கூறியது பற்றி கி.வீரமணியிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த கி.வீரமணி, டெல்லியில் புதிய பெரியார் மையம் அமைக்கப்பட்டது பற்றி வைகோ குறிப்பிட்டிருக்கலாம். டெல்லியில்
பெரியார் மையம் இடித்தபோது இது பற்றி வைகோவிடம் கூறினேன். அப்போது வி.பி.சிங் மருத்துவமனையில் இருந்தார். அதனால்
வைகோவிடம் கூறினேன்.
இது குறித்து வி.பி.சிங்கிடம் சொன்னபோது, அவர் உடனேயே வாஜ்பாயை பார்க்க ஏற்பாடு செய்து கொடுத்தார். வாஜ்பாயை பார்க்க சென்றபோது அந்த குழுவில் வைகோவும் இருந்தார். அவரோட பங்களிப்பால் இன்னொரு பெரியார் மையம் உருவானது. அதனால் வைகோ சொல்லியிருக்கலாம். தவறில்லை என்றார்.
வாஜ்பாய்க்கு இரங்கல் தெரிவித்தபோது இது குறித்து தான் கூறியுள்ளதாகவும், தவறான நிலை எடுத்தார்கள் என்று கூறிய நிலையில் டெல்லி கவர்னரை வரச்சொல்லி, எந்த இடம் வேண்டுமோ அந்த இடத்தைக் கொடுத்து புதிய பெரியார் மையம் அமைக்கப்பட்டது என்று கி.வீரமணி கூறினார்.