மகாத்மா காந்தியின்  பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாத யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டுளளது. இது தொடர்பான காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.

இதில் பங்கேற்றப் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்அழகிரி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நாங்குநேரி காங்கிரஸ் கோட்டை கூட்டணியில் அந்த தொகுதியை காங்கிஸுக்கு ஒதுக்கிய ஸ்டாலினுக்கு நன்றி. நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டியில் திமுக காங்கிரஸ் வெற்றி பெறவேண்டும் என தெரிவித்தார். 

நாட்டில் இருப்பவர்கள் தேசத்தின் பொருளாதரம் சரிந்தது ஏன்? என எண்ணி பார்க்க வேண்டும். எல்ஐசி பங்குகளை பாஜக ஆதரவாளர்கள் நிறுவனங்களில் முதலீடு செய்கிறார்கள். இதனால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என குற்றம்சாட்டினார்..

பாஜக அரசு எல்லா விவகாரத்திலும் தவறான பொருளாதர கொள்கையை கொண்டுள்ளது. இந்திய அரசாங்கமே திறமையற்ற அரசாங்கமாக உள்ளது. 

இந்தி திணிப்பு தொடர்பான  திமுகவின் போராட்டத்துக்கு பயந்து தான் அமித்ஷா ஒரே மொழி என்ற கருத்தை மாற்றி கொண்டார் என கூறலாமே தவிர ஸ்டாலின் பயந்தார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுவது ஏற்க கூடியதல்ல என கூறினார்.