அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமிக்கு சூலூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.


அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று அதிமுகவுக்கு எதிராக கருத்து கூறிவந்தார். இந்நிலையில் அதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தியதாக கடந்த ஜனவரி 25 அன்று கே.சி.பழனிசாமியை காவல் துறை கைது செய்தது. அதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பழனிசாமியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து கோவை மத்திய சிறையில் கே.சி. பழனிச்சாமி அடைக்கப்பட்டார்.


இந்நிலையில் கே.சி.பழனிசாமி ஜாமீன் கோரி கோவை மாவட்டம் சூலூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கே.சி. பழனிச்சாமியின் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அவருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்க உத்தரவிட்டது. சூலூர் காவல் நிலையத்தில் காலையும், மாலையும் ஆஜராகி கையெழுத்திட என்று கே.சி. பழனிசாமிக்கு நிபந்தையும் விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 15 நாட்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கே.சி. பழனிச்சாமி விடுவிக்கப்பட உள்ளார்.