அமித்ஷாவின் கற்பனைக்கு ஒரு எல்லை வேண்டாமா.? தமிழகத்தில்25 தொகுதிகளில் பாஜக வெற்றியா.? கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்

அகில இந்திய அளவில் ஒரே கூட்டணியாக அமையாது என தெரிவித்த கே.பாலகிருஷ்ணன், எப்படி திமுக தமிழகத்தில் பாஜக வரக்கூடாது என்பதற்காக ஒன்று சேர்ந்து உள்ளோமோ அதே போன்று மாநிலங்களுக்கு மாநிலம் அங்குள்ள மாநில கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். 

K Balakrishnan has said that BJP has no chance of winning in 25 constituencies in Tamil Nadu

அமித்ஷாவிற்கு என்ன தகுதி உள்ளது.?

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தில் இருந்து குறைந்தபட்சம் 25 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். அதற்கு இன்று முதலே நாம் அனைவரும் பாடுபட வேண்டும். தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற அளவில் மட்டும் நீங்கள் இருந்துவிடக் கூடாது என பாஜக தொண்டர்களிடம் மத்திய அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கடந்த கால வரலாற்றை பேசுவதற்கு அமித்ஷாவிற்கு என்ன தகுதி உள்ளது என்று எனக்கு தெரியவில்லை. மூப்பனாரும் இணைந்து தான் அன்றைக்கே பிரதமரை தேர்ந்தெடுத்தார். என்றைக்காவது மூப்பனார், சிலர் என்னை பிரதமர் ஆக்குவதற்கு தடுத்து விட்டனர் என்று கூறியுள்ளாரா என கேள்வி எழுப்பினார். 

K Balakrishnan has said that BJP has no chance of winning in 25 constituencies in Tamil Nadu

தமிழகத்தை சேர்ந்தவர் பிரதமரா.?

பாஜகவால் ஆந்திரா கர்நாடகாவில் கால் ஊன்ற முடிகிறது தமிழகத்தில் காலூன்ற முடிய வில்லை என்பதற்காக இது போன்ற வெற்று பேச்சுக்களை அமித்ஷா கூறி வருவதாக விமர்சித்தார். ஒருபோதும் பாஜக தமிழர்களை பிரதமராக ஆக்க வாய்ப்பே இல்லை. 2024 ஆம் ஆண்டு பாஜக வெற்றி பெற்றால் தானே பிரதமர் யார் என்பதை முடிவு செய்வதற்கு என தெரிவித்தார்.  இந்த மாதம் 23ஆம் தேதி நடக்கவுள்ள கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கப்படும் உள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் 25 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்று அமித்ஷா கூறுவது கற்பனைக்கு ஒரு எல்லை வேண்டாமா என தெரிவித்தவர்,  வரக்கூடிய தேர்தலில் அகில இந்திய அளவில் ஒரே கூட்டணியாக அமையாது.எப்படி திமுக தமிழகத்தில் பாஜக வரக்கூடாது என்பதற்காக ஒன்று சேர்ந்து உள்ளோமோ அதே போன்று மாநிலங்களுக்கு மாநிலம் அங்குள்ள மாநில கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளது

K Balakrishnan has said that BJP has no chance of winning in 25 constituencies in Tamil Nadu

நாடு முழுவதும் ஒரே கூட்டணியா.?

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒரே மாதிரியான கூட்டணி இருக்கும் என்று கூற முடியாது. உதாரணத்திற்கு ஒரு மாநிலத்தில் காங்கிரஸ் எங்களோடு இருக்கலாம் மற்றொரு மாநிலத்தில் காங்கிரஸ் எங்களோடு இருக்காது. பிரதமர் வேட்பாளரை முன்மொழிந்து தான் தேர்தலில் நிற்க வேண்டும் என்று அவசியம் கிடையாது தேர்தல் வெற்றிக்கு பிறகு பிரதமர் யார் என்பதை முடிவு செய்து கொள்ளலாம் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு ஐந்தாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கவில்லை. ஆனால் மக்கள் எதிர்க்கும் திட்டமான எட்டு வழி சாலைக்கு ஐந்தாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு மத்திய அரசு செய்துள்ளதாக விமர்சித்தார். 

இதையும் படியுங்கள்

ஒரு எம்.பி. சீட்டை கூட பாஜகவுக்கு தமிழக மக்கள் கொடுக்க மாட்டார்கள்! அமித் ஷாவுக்கு மாஸ் பதிலடி கொடுத்த TR.பாலு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios