திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருபவர் பேராசிரியர் க. அன்பழகன். இவர் கடந்த ஓராண்டுக்கு மேலாக உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் கட்சியின் முக்கிய கூட்டங்களை தவிர மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். 

பொதுக் கூட்டங்கள் உட்பட பெரிய நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்வதில்லை. கட்சியின் சில முக்கிய முடிவகள் எடுப்பது என்றாலும், திமுக தலைவர் ஸ்டாலின் அவரின் வீட்டுக்கு சென்று கலந்தாலோசிப்பார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு அதிக அளவு சளி பிடித்துள்ளதாகவும் அதற்காகவே அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

இதனிடையே அவரை திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் துரைமுருகன்  ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.